மன்னிப்பு Tucson, Arizona, USA 63-1028 1நாம் ஜெபத்திற்காக ஒரு கனம் நின்றவாறு நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு இரட்சிக்கப்பட்டவர்கள் மத்தியில் நின்று “நம்பிடுவேன், யாவும் கை கூடிடும்” என்ற சபையின் பண்டைய கால மகிமையுள்ள பாடலைப் பாடுவது நிச்சயமாய் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் சிலாக்கியம் என்று எண்ணுகிறோம். இது காலங்களினூடாக பிதாக்களின் விசுவாசம் அவருடைய பிள்ளைகளின் இருதயத்தில் இன்னுமாக ஜீவிக்கிறது என்று காண்பிக்கிறது. இதோ அந்தப் பாடல் கூறுவதைப் போன்று நாங்களும் கானான் தேசத்திற்குப் போகிற வழியில் இருக்கிறோம். பிதாவே, இன்றிரவு 'வார்த்தையை மாத்திரம் நம்பிடுவேன்“ என்ற நிலைக்கு இன்னும் யாராவது வராமல் இருப்பார்கள் என்றால், இன்றிரவு அவர்கள் கடைசியாக முறையிட்டு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கின்ற இரவாக இருக்கும்படி ஜெபிக்கிறோம். இன்னும் இங்கு நீதிக்காக நிற்கின்ற முழு சுவிசேஷ வியாபாரிகள் குழு என்று அழைக்கப்படுகிற குழுவிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுடைய தேசத்திலே வியாபார உலகத்தில் இருக்கிறவர்கள் உமக்கு ஊழியம் செய்யும்படி அவர்களுடைய நேரத்தை செலவிட்டு, மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படி பிரயாணத்தில் அவர்களோடு நடக்கிறவர்களுக்கு உதவி செய்து, தங்களுடைய பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக மாற்றிக் கொண்டிருப்பதை அறியும்போது சந்தோஷமடைகிறோம். 2கர்த்தாவே, இன்றிரவு இந்த இருண்ட உலகிலே, “ஜீவனுள்ள தேவனுடைய சபையில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தினருக்கும், புதியதாய் வந்திருக்கிறவர்களுக்கும் மகிமைக்கு செல்லும் வழி உண்டென்று காட்டும்படியாய் தீவட்டிகளை ஏந்தி நிற்கும் ஊழியக்கார சகோதரர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இப்பொழுது வார்த்தையை திறக்க முயற்சிக்கிறதான வேளையில், நீர் தாமே அவர்களுக்காக தேவையானதை பகிர்ந்து கொடுக்குமாறு ஜெபிக்கிறோம். மற்றும் இன்றிரவு இந்த ஆராதனையை முடித்து வீட்டிற்குக் கடந்து செல்லும்போது, உம்முடைய ராஜ்யத்தில் புதியதாய் குழந்தைகள் சேர்க்கப்பட்டிருப்பார்களாக, அல்லது இன்றிரவு கர்த்தாவே இங்கிருக்கிற யாராவது ஒருவர் வியாதியினால் அவதிப்பட்டு அந்த மகத்தான வைத்தியருடைய தொடுதல் தேவைப்படும் என்றால், அதை அவர்கள் தாமே பெற்றுக் கொள்வார்களாக. இதை அருளும் கர்த்தாவே. உமக்கே எங்களுடைய துதிகளை தாழ்மையுடன் ஏறெடுத்து அனைத்தையும் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.... 3நான் மக்கள் முன்பாக நின்று என்னுடைய வாழ்கையின் சந்தோஷமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் எனக்கு என்னவாக இருக்கிறார் என்பதைக் குறித்து அவரைப் பெற்றிராதவர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வதென்பது என்னுடைய வாழ்கையில் கிடைத்த மாபெரும் சிலாக்கியமாக எண்ணுகிறேன். அன்றொரு நாளில் பேசின வண்ணமாக நான் சிறு வாலிபப் பிரசங்கியாக இருந்தபோது, ஒரு வாலிபப் பிரசங்கி இருக்கவேண்டிய நிலையில் ஜீவித்தேன். ஆனால் இப்பொழுதோ அந்த காலத்தைக் கடந்து முதிர்ந்த பிரசங்கியாய் மாறிக் கொண்டிருக்கிறேன். தற்போது நான் ஊழியத்திற்கு வந்து முப்பத்தி மூன்று வருடங்களாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும், அந்த பாடல் கூறுவதைப் போன்று, “அவர் முந்தின நாளைக் காட்டிலும் இன்னும் அதிகமாய் இனிமையானவராய் இருக்கிறார்”. நான் என்னுடைய பாதி காலத்தைக் கடந்து, சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், கிறிஸ்துவானவர் தாமே எனக்கு நாளுக்கு நாள் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறார். மற்றும் வியாபாரிகள் கூட்டத்தாரை சேர்ந்த ஸ்திரீகள், புருஷர்கள் மத்தியில் அவர்களுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் அதிதேவையான காரியத்தைக் குறித்து பேசும்படிக்கு சிலாக்கியம் இருக்கும் என்றால் “நித்தியஜீவனை” அன்றி வேறொன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நித்திய ஜீவனைக் காட்டிலும் ஒரு மகத்தான காரியம் இல்லை என்று நினைக்கிறேன். 4நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது, நல்லது சிறு பையனாக இருந்தபோது நீங்கள் பம்பரம் விடும் விளையாட்டை விளையாடினீர்கள். சிறு பெண்கள், காகிதத்தினால் பொம்மைகளைச் செய்தீர்கள். அதன் பிறகு நீங்கள் படிக்கும்படி சென்றீர்கள். பிறகு பழுப்பு நிற அல்லது நீல நிற கண்களுடைய பெண்னை திருமணம் செய்தீர்கள். பிறகு ஒரு வீட்டைக் கட்டி உங்களுடைய பிள்ளைகளை படிக்க வைப்பீர்கள்.சரி. அதன் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்? இவையெல்லாம் கடந்து போன பின்பு ஒரு அசலான காரியம் இருக்கிறதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீங்கள் அப்பொழுது எல்லாவற்றைக் காட்டிலும் அந்த மேன்மையான ஒன்றிற்குள்ளாக பிரவேசிக்கிறீர்கள். மற்ற எல்லாமுமே அவசியம் தான். நிச்சயமாகவே பிள்ளைகளுக்குத் தாயாகவும் அல்லது தகப்பனாகவும் செய்ய வேண்டிய காரியங்கள், பிள்ளைகளுடைய படிப்பு மற்றும் வீட்டுக்காரியங்கள் எல்லாமுமே பார்க்கவேண்டியதுதான். ஆனால் இவைகள் எல்லாமே அழிந்துபோம். அது அப்படியே கடந்து போய்விடும். ஆனால் நான் அறிந்ததிலே நித்திய ஜீவன் தான் மகத்தானதாய் இருக்கிறது. இது நான் சிறுவனாக இருந்தபோது என்னை திருப்திப்படுத்தினது. இந்த நடுத்தர வயதில் திருப்திபடுத்துகிறது மற்றும் என்னுடைய வாழ்க்கையைச் சுற்றி உள்ள இத்திரையானது என்னை விட்டு விழும்போது நான் நிச்சயமாக என்னுடைய ஜீவியத்தை எல்லாம் யாருக்கு அர்ப்பணித்தேனோ, அந்த ஒருவரை சந்திப்பேன் என்பதைக் குறித்து சந்தோஷமடைகிறேன். 5இப்பொழுது இந்த குழுவின் தலைவர் சகோதரன் டோனி அவர்களோடும், சகோதரன் காரல் வில்லியம்ஸ், இன்னும் இக்குழுவின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் வருகை தந்திருக்கும் எல்லோரோடும் இந்த இரவு ஐக்கியம் கொண்டிருப்பதைக் குறித்து சந்தோஷமடைகிறேன். நிச்சயமாக இங்கு இருப்பதற்கு நாங்கள் சந்தோஷமடைகிறோம். ஒரு விசை நான் ஆர்கன்சாசிலுள்ள “லிட்டில் ராக்” என்ற பகுதியில் இருக்கும் ராபின்சன் நினைவு மையத்தில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே அநேக வருடங்களாக ஊன்றுகோலோடு தெருவில் உட்கார்ந்து பென்சில் விற்றுக் கொண்டு வந்த ஒருவர் சுகத்தைப் பெற்றுக் கொண்டார். ஓ, அவர் முற்றிலுமாய் முறுக்கப்பட்டு, மூட்டுகள் எல்லாம் முடங்கிக் கொண்டு எந்த பக்கமும் அசைய முடியாதபடிக்கு இருந்தார். மக்கள் அவரைப் பார்த்து மிகவும் பரிதாபப்பட்டார்கள். ஓரிரவு அவர் ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தபோது, ஜெப அட்டையைப் பெற்று, ஜெப வரிசையில் வந்து சுகத்தைப் பெற்றார். 6அடுத்த நாள் அவருடை ஊன்றுகோலை முதுகிலே வைத்து, அத்தெருவிலே முன்னும் பின்னுமாக நடந்து சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். நானோ அந்த இடத்தில் தொடர்ந்து பேச முயற்சித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்து, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் எல்லாவற்றையும் முயற்சித்து மிகவும் சோர்ந்து போய்விட்டேன். நீர் பேசினதை கேட்டபோது நீர் ஒரு நசரேயக் கூட்டத்தை சேர்ந்தவர் என்று நினைத்தேன்” என்றார். ஏனென்றால் அவரும் நசரேயக் கூட்டத்தை சேர்ந்தவராக இருந்தார். தொடர்ந்து அவர் “அநேக முறை உம்மைச் சுற்றி பெந்தெகொஸ்தேயினர் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்பொழுது யாரோ ஒருவர் நீர் பெந்தெகொஸ்தேயினர்” என்று சொன்னார்கள். அதன் பிறகு நீர், “நான் பாப்டிஸ்டுஎன்று, அந்த சபையினால் நியமிக்கப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதோ நான் முழுவதுமாக குழம்பிவிட்டேன். நீர் எதைச் சார்ந்தவர்? என்று கேட்டார். அதற்குநான், “அது மிகவும் சுலபமான காரியம் நான் பெந்தெகொஸ்தே, நசரேய, பாப்டிஸ்டைச் சேர்ந்தவன்” என்று சொன்னேன். 7ஒரு சில வருடங்களுக்கு முன்பாக நான் பெந்தெகொஸ்தே மக்கள் மத்தியில் வந்த போது, தேவன் என்னை அனுப்பி அவர்களிடையே வியாதிப்பட்டிருக்கிற பிள்ளைகளுக்கு ஜெபிக்கும் படியாய் நியமித்தார். அந்த நேரத்தில் நான் இருந்ததான ஸ்தாபனம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறதையும், தெய்வீக சுகத்தையும் விசுவாசிக்கவில்லை. அவர்களுக்கு அது ஏதோ ஒரு அந்நிய காரியம் போல் இருந்தது. நான் பரிசுத்த உருளையாக மாறிவிட்டேன் என்று சொன்னார்கள். சரி, ஒரு வேளை நான் உருளையாகவே மாறி இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும் சரி, நான் இதற்காக மிகவும் சந்தோஷமடைகிறேன். யாரோ ஒருவர் நான் என்னுடைய சிந்தையை இழந்துவிட்டேன் என்று சொன்னார். அதற்கு நான், “அப்படி என்றால், என்னை இப்படியே விட்டுவிடுங்கள், நான் அந்தவிதமாக இருப்பதைக் காட்டிலும் இப்படியே இருக்கிறதை விரும்புகிறேன்” என்றேன். இந்த விதமாக இருப்பதை நான் மிகவும் அருமையாய் உணருகிறேன். இது விவரிக்க முடியாத சந்தோஷமாய் இருக்கிறது. நான் பெந்தெகொஸ்தே மக்கள் மத்தியில் வந்தபோது, அவர்களில் ஒரு கூட்டம் மட்டும் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். பிறகு நான் பாப்டிஸ்டு சபையில் இருந்ததைப் போன்று இங்கேயும் அநேக குழுக்கள் இருக்கிறதை அறிந்தேன். அதன் பிறகு நான் எந்த கூட்டத்தாரோடும் சேரவில்லை. பிறகு நான் எல்லோருக்கும் இடையில் நின்று “நாம் எல்லோரும் சகோதரர்கள்” என்று சொன்னேன். பாருங்கள்? விசுவாசத்திலும், ஜெபத்திலும், முயற்சியினாலும் இணைந்து இருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான சபையைக் காண்பதே என்னுடைய நோக்கமாயும் அது முதற்கொண்டு அதுவே என்னுடைய மனப்பான்மையுமாய் இருக்கிறது. 8அதன் பிறகு, முழு சுவிசேஷ வியாபாரிகள் குழு ஒன்றை ஆரம்பித்தார்கள். அவர்கள் ஒரு ஸ்தாபனம் அல்ல. அவர்கள் வெறும் குழுவாய்க் கூடுகிறவர்கள். அவர்கள் எல்லா கூட்டத்திலிருந்தும் மக்களைக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்து, என்னை அவர்களுடைய சிறகுகளுக்குள்ளாக எடுத்துக் கொண்டார்கள். நான் இந்த கிறிஸ்தவ வியாபாரிகள் மத்தியில் பேசும்படி கொடுக்கப்பட்ட தருணத்திற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் ஒரே நேரத்தில் என்னுடைய விசுவாசத்தை எல்லா கூட்டத்தாரிடமும் சொல்லமுடிகிறது. அது எனக்கு ஒரு மகத்தான காரியமாய் இருக்கிறது. இப்பொழுது நான் ஒரு குழுவைச் சார்ந்தவனாக இருக்கிறேன். அது இந்த முழு சுவிசேஷ வியாபாரிகள் குழுவே. இப்பொழுது நாங்கள் ஆப்பிரிக்கா நாட்டிற்குப் போகும் படி திட்டமிட்டபடி சரியாக தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்றோம். தேவன் எனக்குக் கொடுத்த கூட்டத்திலேயே மகத்தானது தென் ஆப்பிரிக்காவில் நடந்ததுதான் என்று கருதுகிறேன். முப்பதாயிரம் பழங்குடியினர் ஒரு மத்தியான வேளை ஆராதனையில் ஒட்டு மொத்தமாக கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். முப்பதாயிரம் பேர் என்று அவர்கள் கணக்கெடுத்தார்கள். அடுத்தநாள் காலையில் மாநகராட்சி மன்றத் தலைவரான சிட்னி ஸ்மித் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவரும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். அது விளையாட்டுத்திடல் அல்லது பந்தயத்தடம் என்று நினைக்கிறேன்.அவர் என்னை அழைத்து 'உங்களுடைய ஜன்னல் மூலமாக வெளியே பாருங்கள்“ என்றார். நான் பார்த்தபோது அங்கே நிரப்பப்பட்ட ஏழு வண்டிகள் வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சொல்லப்போனால், அது மிகப்பெரிய ஆங்கிலேய டிரக்குகள், கிட்டத்தட்ட இந்த அறையின் நீளம் கொண்டவை. அதுஅவர்கள் முந்தய நாளில் உபயோகப்படுத்தின ஊன்றுகோல், சக்கர நாற்காலிகள் மற்றும் அவர்கள்விட்டுச் சென்ற எல்லாவற்றையும் கொண்டு முழுவதுமாக நிரம்பியிருந்தது. அவர்கள் அந்த டிரக்கின் பின்பக்கமாக தங்களுடைய கைகளை உயர்த்தினவாறு, நீங்கள் சற்று நேரத்திற்கு முன்பாக பாடின ”நம்பிடுவேன், நம்பிடுவேன் யாவும் கை கூடிடும்“ என்ற அதே பாடலைப் பாடியவாறு நடந்துகொண்டு வந்தார்கள். 9அப்பொழுது என்னுடைய இருதயத்தில் “இது எனக்கு ஒரு நினைவு நாளாய் இருக்கும் ஆண்டவரே” என்றேன். பிறகு நான் மூன்று நாள் மாத்திரமே அங்கு இருக்கும் படியாக திட்டமிட்டிருந்தது. அங்கிருந்து தான் இப்பொழுது திரும்பி வந்திருக்கிறேன். அந்த மூன்று நாட்கள் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவைகளெல்லாம் தேவன் அந்த மேடையின் மேல் செய்த ஒரே ஒரு அற்புதத்தின் மூலமாக வந்ததாய் இருக்கிறது. அதாவது நாயைப் போல் தன்னுடைய கையினாலும், பாதத்தினாலும் நடந்து கொண்டிருந்த ஒரு பையனுக்குச் சரியான சிந்தையைக் கொடுத்து எல்லோருக்கும் முன்பாக அவனை எழுப்பி நிறுத்தினதே அதற்குக் காரணமாக இருக்கிறது. மற்றும் அதற்கு முந்தைய நாளில் பழங்குடியினர் மத்தியில் போர் நடந்து கொண்டிருக்கிறதினாலே அந்த பழங்குடியினர்கள் (ஒருவரோடேஒருவர் பேசாமல்) தங்களுக்கு ஒரு தடுப்பைப் போட்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ அவர்கள் சமாதானமாகி ஒருவர்; மேல் இன்னொருவர் தங்கள் கைகளைப் போட்டுக் கொண்டு, “நம்பிடுவேன், நம்பிடுவேன் யாவும் கைகூடிடும்” என்று பாடி நடந்து போனார்கள். அந்த பிரமாண்டமான பண்டையகால சுவிசேஷம் அதினுடைய எளிமையில் இருந்தாலும், எளிமையாக கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கும் போது, அது அதினுடைய வல்லமையை ஒருபோதும் இழக்கவில்லை என கூறட்டும். அது ஒவ்வொரு நாளும் எனக்கு அருமையாக மாறிக் கொண்டுவருகிறது. 10இன்றிரவு நீங்கள் வியாபாரியாய் இருந்து, இதுவரை எந்த வியாபாரியின் ஐக்கியத்திலும் சேர்ந்ததில்லை என்றால், இந்த முழு சுவிசேஷ வியாபாரிகள் குழுவில் சேர்ந்துகொள்ளும்படி பரிந்துரைக்கிறேன். இதில் சேருவதற்கு நீங்கள் ஏதாவதொரு சபையை சேர்ந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, அல்லது நீங்கள் எந்த சபையை சேர்ந்திருந்தாலும் முற்றிலும் பரவாயில்லை. இது “முழு சுவிசேஷவியாபாரிகள்” என்ற பெயர் கொண்டதினால், நீங்கள் முழு சுவிசேஷர்களாக இருக்கவேண்டும் என்ற அர்த்தமில்லை. மெதோடிஸ்ட், பாப்டிஸ்டு, லூத்தரன், பிரஸ்பிடேரியன் இன்னும் கத்தோலிக்க குருமார்கள் யாராயினும் சரி, அது யாராய் இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு நன்றாகவே தெரியும், யாக்கோபு வெட்டின கிணற்றை விட்டு ஓடும் படி பெலிஸ்தியர்கள் அவனை விரட்டினார்கள். அதை அவன் “கெடுதல்” அல்லது அது போன்று ஏதோ ஒன்றாக அக்காரியத்தை அழைத்தான். அவன் மறுபடியும் இன்னொன்றை வெட்டினான். அங்கிருந்தும் அவனை விரட்டினார்கள்.அதை அவன் “விவாதம்” என்று அழைத்தான். மூன்றாவதாக இன்னொன்றை வெட்டி “நம் அனைவருக்கும் இது போதுமானதாய் இருக்கிறது” என்று சொன்னான். இவ்விதமாகத் தான் நம்மிடத்திலும், “நாம் அனைவரும் இங்கு கூடி வருவதற்கு இது போதுமானதாய் இருக்கிறது”. ஆகவே நீங்கள் இங்கு டூசானுக்கு வந்து இந்த ஐக்கியத்தில் பங்கு கொள்வீர்கள் என்றால் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம். 11மற்றும் பீனிக்ஸில் நடக்க இருக்கிறதான கூட்டத்தை மறந்துவிடாதீர்கள். இந்த மேடையில் நின்று எந்த விளம்பரத்தையும் கொடுக்கக் கூடாது என்று நாம் எடுத்த தீர்மானத்தை அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த கூட்டமெல்லாம் முழு சுவிசேஷ வியாபாரிகளோடு இணைந்திருக்கிறதினாலும், வருகிற ஜனவரி ரமதாவில் நான்கு நாட்கள், 19 முதல் 23 வரை நடக்கவிருக்கும் கூட்டத்தில் பிரசங்கத்திற்கு முன்பாக வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்க போகிறதினாலும் இதைச் சொல்லுகிறேன். நான்கு நாட்கள்... அது சரியா? 19-ம் தேதி துவங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் கூட்டம் இருக்கும். மற்றும் இங்கிருக்கிற டூசான் மக்களுக்கு, அடுத்த ஞாயிறு இரவு, கிரான்ட்வே என்ற இடத்தில் இருக்கிற அசெம்பிளீஸ் ஆப் காட், சகோதரன் அர்னால்ட் மாக்கின் சபையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். யாராவது வியாதிப்பட்டவர்கள் வர விரும்புவீர்களானால் அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இரவன்று கர்த்தருக்குச் சித்தமானால் அங்கே பேசவும், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கவும் இருக்கிறேன். 12இப்பொழுது தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் மேல் தங்கியிருப்பதாக. உங்களுடைய வேதாகமத்தை வைத்திருப்பீர்கள்என்றால், நான் துரிதமாக வார்த்தையிலிருந்து பேச விரும்புகிறேன். ஏனென்றால் அநேகர் அப்படியாய் நாளைய தினத்தில் வேலைக்குச் செல்லவேண்டியதாய் இருக்கிறது என்று அறிந்திருக்கிறேன். இன்றிரவு நான் வாசிக்கப் போகிறதான ரோமர் 8-ம் அதிகாரத்திலிருந்து உங்களிடத்தில் பேசப்போகிறேன். 28-ம் வசனத்திலிருந்து 32 வரை தொடர்ந்து வாசிக்கலாம். ரோமர். 8: 28-32. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறான வராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? 13கர்த்தர் தாமே வாசித்த அவருடைய வார்த்தையோடு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது “மன்னிப்பு” என்ற பொருளின் பேரில் பேச இருக்கிறேன். இன்றிரவு, வேதமானது 'அவர் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்“ என்று கூறுகிறது. ”எல்லாவற்றையும்“ என்பதைக் குறித்து நிச்சயமாகவே நம்மால் பேச முடியாது. ஆனால் அவர் நமக்குக் கொடுத்த ”மன்னிப்பு“ என்ற ஒரு காரியத்தை மாத்திரம் பார்க்கலாம். ”மன்னிக்கப்படுவதென்பது“ மிகவும் மகிமையான வார்த்தை என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாம் எல்லோரும் பாவத்தினிமித்தம் குற்றவாளிகளாய் தீர்க்கப்படுகிறோம். அனைவருமே பாவம் செய்து தேவனுடைய மகிமையிலிருந்து விழுந்தோம். ஆனால் தேவன் தம்முடைய குமாரன் மூலமாக நம்முடைய அக்கிரமங்களையும் பாவங்களையும் மன்னித்தார். 14இந்த மன்னிப்பானது புரட்சி யுத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து படித்த காரியத்தை என் ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது. அது புரட்சி யுத்தம் தான் என்று நினைக்கிறேன். அங்கே காலாட்படை சிப்பாய் ஏதோ ஒரு காரியத்தை செய்ததினால், அந்த நீதிமன்றமானது அவனை குற்றவாளி என்று தீர்த்து அவனை சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பு கொடுத்திருந்தது. அவன் அந்த யுத்த நேரத்தில் தன்னுடைய கடமையில் தவறினதே காரணம் என்று நினைக்கிறேன். அவன் துப்பாக்கி சுடும் குழுவினாலே சுட்டுக் கொல்லப்பட வேண்டியதாய் இருந்தது. ஆனால் இவனுக்காக ஒருவன் பரிதாபப்பட்டு ஜனாதிபதி லிங்கன் அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டான். லிங்கன் ஒரு அருமையான கிறிஸ்தவ பண்புள்ளவர். அந்த தூதைக் கொண்டு வந்தவன் அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரைச் சந்தித்தான் என்று சொல்லுகிறார்கள். அவரிடம் மண்டியிட்டு, “திரு. லிங்கன் அவர்களே, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதியே, கருணையுள்ளவரே” என்று சொல்லி, “நீர் கிறிஸ்தவராய் இருப்பதினாலேயும், விடாய்த்துப் போனவர்களுக்கு இரங்குகிற இருதயம் இருக்கிறதை அறிந்தும் ஒருவனுக்காக உம்மிடம் இரக்கம் கோருகிறேன். என்னுடைய நண்பன் ஒருவன், அவன் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்த போது துப்பாக்கி சுடுகிற சத்தமும், பீரங்கிகள் சுடுகிறதையும் கேட்டு பயந்து தன்னுடைய கடமையின் பாதையில் இருந்து தவறினான். ஆனால் அவன் அந்த விதமாக செய்யும்படி எண்ணவில்லை. திரு. லிங்கன் அவர்களே, அவன் நல்ல மனிதன். இன்னும் இன்றைய தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் துப்பாக்கி சுடுகிற குழுவிடத்தில் மரிக்கப் போகிறான். நீர் அவனை மன்னித்தேன் என்று கையெழுத்திட்டாலொழிய அவன் தப்பித்துக் கொள்ள வேறு வழியில்லை“ என்றான். 15திரு. லிங்கன் அவருடைய கண்களில் கண்ணீரோடு ஒரு சிறு காகிதத்தை அவருடைய பெட்டியிலிருந்து எடுத்து, “ஆபிரகாம் லிங்கன் ஆகிய நான், இந்த நபரை மன்னித்தேன். அவன் மரிக்கக் கூடாது” என்று எழுதி அதோடு அவருடைய பெயரை கையெழுத்தாகப் போட்டார். அந்த மனிதன் தேவனுடைய ஆசீர்வாதங்களை எல்லாம் அவருக்குக் கூறி, சிறைச் சாலையில் உள்ள தன்னுடைய நண்பரிடம் சென்று, “உன்னுடைய மன்னிப்பைப் பெற்றிருக்கிறேன்” என்று சொன்னான். அதன் பிறகு அவன் அந்த சிறிய துண்டுக் காகிதத்தை எடுத்து அவனுக்குக் காண்பித்தான். அவனோ, “என்னை கேலி செய்யாதே. நான் சாகும்படியாய் இருக்கிற நேரத்தில் இப்படி ஒரு காரியத்தை செய்வாயோ? நான் அதை நம்ப மாட்டேன். என்னால் அதை நம்ப முடியாது. அது என்னை விடுவிக்காது. யார் வேண்டுமானாலும் ”ஆபிரகாம் லிங்கனுடைய“ கையெழுத்தைப் போடலாம்” என்றான். அதற்கு அவனோ, “இது ஜனாதிபதியின் கையெழுத்து, நீ மன்னிக்கப்பட்டாய்” என்றான். அவன் அதை நம்பாமல் அந்தப்படியே திரும்பி நடந்து போய்விட்டான். பிறகு அவன் சுட்டுக் கொல்லுகிற குழுவால் மரித்துப் போனான். அதன் பிறகு இங்கே அமெரிக்க ஐக்கிய நாட்டு ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கனிடமிருந்து இந்த மனிதனை விடுதலை செய்யும்படி அறிக்கை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அவனை கொன்றுவிட்டதினால், இந்த வழக்கானது மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்பொழுது அவர்கள் எடுத்தமுடிவு என்னவென்றால் “மன்னிப்பை மன்னிப்பாய் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அது மன்னிப்பு இல்லை” என்றனர். 16இன்றிரவு வாசித்ததைப் போன்று, “தேவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறார்”. அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்கிறார். தேவனுடைய வார்த்தையை மன்னிப்பாய் ஏற்றுக் கொள்கிற யாவருக்கும் அது மன்னிப்பாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெறும் வாசிக்கிறதினால் நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல. அதினுடைய அர்த்தம் என்னவென்றால் தேவன் அவருடைய குமாரனை அனுப்பி நீ மரிக்க வேண்டிய இடத்தில் அவர் மரித்து, உன்னை மன்னித்தார் என்று ஏற்றுக் கொள்வது தான் மன்னிப்பாய் இருக்கிறது. அது குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்படுதல் என்பதையே கூற விரும்புகிறேன். தேவனிடம் இருந்து வருகிற மன்னிப்பு, ஒருவனை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பது. மனதை திருப்பக்கூடிய மனோதத்துவ காரியத்தைப் போன்று அல்ல. அதாவது ஒரு சபையில் சேர்வதோ அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டைக் கடைபிடிக்கிறதினால், ஏதோ நல்ல காரியத்தைச் செய்வதால் அல்ல. ஆனால் கல்வாரியின் வல்லமையினால் குற்ற உணர்விலிருந்து விடுதலை ஆகின்றதாய் இருக்கிறது. ஏதோ ஒரு காரியம் நிச்சயமாக உங்களை விடுதலை செய்தது. இனி எந்த குற்ற உணர்வும் இல்லை. ரோமர் 5:1-ல் வேதம் சொல்லுகிறதை நான் விசுவாசிக்கிறேன். “ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாமிசத்தின்படி நடவாமல் ஆவியின் படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை”. (ரோமர்8:1) 17இப்பொழுது ஒரு புருஷனோ அல்லது ஸ்திரீயோ பாவத்திலிருந்து விடுதலை பெறும் போது உலகத்தின் காரியங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற எந்த வாஞ்சையும் அவர்கள் இருதயத்தில் இருக்காது. அவன் முற்றிலுமாய் மன்னிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக புது சிருஷ்டியாய் மாறுகிறான். அவனுடைய விருப்பம் உன்னதத்தில் இருக்கிற தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கும் கிறிஸ்துவின் மேல் இருக்கும். அவன் முற்றிலுமாய் விடுவிக்கப்பட்டான். ஏதோ ஒரு மதகுருவோ அல்லது ஊழியக்காரரோஅவனுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவனுக்குள்ளாகவே அவன் மன்னிக்கப்பட்டான் என்று அறிந்திருப்பான். ஏனென்றால், தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவனுக்குக் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதினிமித்தம் அதை அறிவான். பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருப்பது எப்பேர்ப்பட்ட உணர்வு! 18அனேக வருடங்களுக்கு முன்பாக தென் பகுதியிலிருந்த அடிமைகள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படும்படி கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலை பொழுதின் சூரிய உதயமாகும் நேரத்தில் அவர்கள் விடுதலை பண்ணப்பட நேரம் குறிக்கப்பட்டது.அப்பொழுது அனைவருமாக அந்த விவசாய நிலத்திலிருந்து வெளியேறினார்கள். இளம் வாலிபர்கள் மலையின் உச்சிக்கு ஏறி சூரியன் உதிக்கிறதைப் பார்க்கும்படி முன்பாக ஏறினார்கள். பிறகு அவர்களுக்கு கீழே வயதானவர்கள் இருந்தார்கள். மிகவும் தாழ்மையான பகுதியில் ஸ்திரீகளும் பிள்ளைகளும் இருந்தார்கள். அந்த பகல் வெளிச்சம் வருவதற்கு முன்னதாகவே நீண்ட நேரமாய் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர்களுடைய அடிமைத்தன அரைக்கச்சைகளாலும், கடினமான சோதனைகளாலும், ஜீவிய நாளெல்லாம் துக்கத்தினால் வாடியதினிமித்தம், அவர்கள் விடுதலையாக்கப்படும், அந்நாளுக்காக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள். மற்றும் இந்த விடுதலையின் அறிவிப்பானது “அந்த குறிப்பிட்ட நாளின் காலையில் சூரியன் உதிக்கும் நேர முதற்கொண்டு நீங்கள் விடுதலையானீர்கள் என்று சொல்லப்பட்டது”. ஆகவே அவர்கள் மலையின்மேல் ஏறி சூரியன் உதிக்கும் நேரத்துக்காய் ஏங்கி ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓ, பாவிகள் மாத்திரம் இன்றிரவு தாங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் என்று ஆவலோடு எதிர்நோக்கி அறிந்து கொள்வார்களானால்‚ இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அந்த நிமிடமே, நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள். அப்பொழுதே நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள். அந்த வாலிபர்கள் அங்கே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னார்கள். சூரியன் கிழக்கிலே தோன்றுகிறதை கண்டபோது, அவர்கள் கீழே இருந்த வயோதிபர்களிடத்தில், “நாம் விடுதலையானோம்” என்று உரக்க சத்தமாய் கத்தினார்கள். வயோதிபர்கள் அவர்களுக்கு கீழே இருந்த ஸ்திரீகள் மற்றும் சிறு பிள்ளைகளிடத்தில் “நாம் விடுதலையானோம், நாம் விடுதலையானோம்”, சூரியன் உதித்தது என்றார்கள். 19ஓ, மனிதன் பாவத்திற்கு விற்கப்பட்டு, அவனை நீதிமானாக்கும்படி தேவ குமாரன் கல்லறையிலிருந்து வெளியே வந்த அக்காலையை நினைக்கும் போது; அப்படியாய் தேசங்கள் முழுவதிலும் உரக்க சத்தமாய் “நாம் பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும், கல்வாரியின் மூலமாய் இலவசமாய் அடிமைத்தனத்திலிருந்து மன்னிக்கப்பட்டு விடுதலையானோம்” என்று சத்தமிட்டிருப்பார்கள். இதைக் காட்டிலும் மேன்மையான காரியத்தை மனுகுலத்துக்குக் கொடுக்கமுடியாது. ஏதேன் தோட்டத்தில் மனிதன் பாவம் செய்தபோது அவன் ஒரு பெரிய பிளவைத் தாண்டி, நித்தியமானவர் இடத்திலிருந்து தன்னை முற்றிலுமாய் வேறு பிரித்துக் கொண்டான். அது வரைக்கும் மனிதன் தேவனோடே நித்தியமாய் இருந்தான். அவனுக்கு எந்த வியாதியும், துக்கம் அல்லது மரணமும் இருந்ததில்லை. மரிக்கும் படியாய் மனிதன் உண்டாக்கப்படவில்லை. பாதாளமானது மனிதனுக்காய் உண்டாக்கப்படவில்லை. பாதாளம் பிசாசுகளுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. மனித இனத்திற்காக அல்ல. ஏனென்றால் அவர்கள் பூமியின் மேல் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆனால் மனிதனோ பாவம் செய்து நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைக் கடந்து, தேவனிடத்திலிருந்து பிரிந்துபோய், திரும்பி வரும்படிக்கு எந்த வழியும் இல்லாமல் போனான். முற்றிலுமாய் இழக்கப்பட்டுப்போனான். அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனால் திரும்பவும் வரவே முடியாமல் போயிற்று. ஆனால் இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ள தேவன், நமக்காகக் கொடுக்கப்பட்ட அந்த பதிலி ஒன்றை ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று சொன்னதினிமித்தம் அப்படி நடந்தேறினது. தேவனுடைய நீதியும் அவருடைய பரிசுத்தமும் மரணத்தைக் கோரினது. ஏனெனில் அது அவருடைய வார்த்தை. அவர் தேவனாய் இருப்பதற்கு அவருடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளவேண்டியதாய் இருந்தது. 20ஏதேன் தோட்டத்தில் அவருடைய பிள்ளைகளாக இருந்து அவருடன் ஐக்கியம் கொண்ட, அவரால் நேசிக்கப்பட்ட மனுக்குலம் “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்,” என்று அவர் உரைத்த வார்த்தையால் அவரிடமிருந்து பிரிக்கப்படுவதை இதயம் உடைந்த நிலையில் அவர் காண வேண்டியதாயிற்று. அவர் எல்லாக் காலங்களிலும் அப்படி காத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆகையால் “தேவன் என்னவெல்லாம் சொல்லுகிறாரோ அதெல்லாம் உண்மை என்று அதின் மேல் சார்ந்திருக்கலாம்”. அது நிச்சயமாக நடந்தேற வேண்டும். தேவன் தனது வார்த்தையை திரும்பவும் எடுத்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் அவர் ஆரம்ப முதலாய் முடிவற்றவராய் இருக்கிறார். அவரது முதலாவது முடிவே முற்றிலுமான முடிவாய் இருக்கிறது. அவர் ஒரு காரியத்தைக் குறித்து இன்னும் சற்று அதிகம் கற்று அறிந்ததினாலே உரைத்த வார்த்தையைத் திரும்பவும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே தேவன் ஏதாவதொரு காரியத்தைச் சொல்லுவாரானால் அது முற்றிலுமானதாய் இருக்கிறது. அது மாறவே முடியாது. ஏனென்றால் அது முற்றிலுமான தீர்மானமாக இருக்கிறது. தேவன் தன்னுடைய தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட நபருக்கு என்ன விதமாய் செயல்பட்டாரோ அதே விதமாய் என்றென்றைக்கும் அவருடைய தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்குக் கிரியை செய்தாக வேண்டும். அதே போல் மனிதன் இரட்சிக்கப்படும்படி முதலில் ஒரு வழியை அவர் வைத்திருப்பார் என்றால் அது என்றென்றைக்கும் அந்த விதமாகவே இருக்கிறது. விசுவாசத்தின் மூலமாக நம்புகிற வியாதியஸ்தனுக்கு தேவன் சுகத்தை வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரானால், அது என்றென்றைக்கும் அந்த விதமாகவே இருக்கும். அவர் அதை திரும்பவும் எடுத்துக் கொள்ள முடியாது. பார்த்தீர்களா? அவர் எப்பொழுதும் அந்த விதமாகவே இருந்தாக வேண்டும். 21இப்பொழுது ஏதேன் தோட்டத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பதிலியை தேவன் ஏற்றுக் கொண்டார். அது இரத்தத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட பலியாக இருக்கிறது. இரத்தமே கிரயத்தைச் செலுத்த வேண்டியதாய் இருந்தது. அது என்றென்றும் அந்த விதமாகவே இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்த வழியும் அல்லது எந்த ஒரு காரியமும் இருந்ததில்லை. எப்பொழுதுமே இரத்தத்தின் மூலமாகத் தான் இருக்கிறது. தேவன் அவருடைய பிள்ளைகளை திரும்பவும் ஏற்றுக் கொள்ளுகிற ஒரே வழி எதுவென்றால் பதிலியாகக் கொடுக்கப்பட்ட இந்த இரத்தத்தினால் மாத்திரமே வருகிறது. வேறு எந்த ஒரு காரியமும் அதற்கு பதிலாகச் செலுத்த முடியாது. வேறு எதுவுமே அதைச் செய்ய முடியாது. தேவன் எடுத்த முதலாவது தீர்மானம் எப்பொழுதும் முற்றிலுமானதும், நித்தியமானதுமாய் இருக்கிறது. அது உண்மை என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனென்றால் தேவன் பொய்யுரையாதவரும் அவருடைய வார்த்தையைத் திரும்பவும் எடுத்துக் கொள்ளாதவருமாய் இருக்கிறார். அந்நாள் முதல் தேவன் மனிதனோடு ஐக்கியம் கொள்ளுகிற வழியும் இடமும் அதுவே. 22இப்பொழுது, மரணம்… என்றால் பிரிந்திருத்தல்… என்று அர்த்தம். நாம் இந்தவிதமாக, நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற மரணமானது மரணம் என்று அர்த்தம் ஆகாது. இயேசுவானவர் “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்றார். அங்கே பேசப்பட்ட மரணமானது தேவனுடைய சமூகத்திலிருந்து பிரிந்திருத்தல் என்று அர்த்தம். ஆனால் நமக்கு ஏற்படுகிற இந்த சரீரப்பிரகாரமான மரணமானது மரணம் ஆகாது. ஏனென்றால், நாம் இன்னுமாக தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறோம். இந்த இடத்தில் இருந்து அவருடைய பிரசன்னத்திற்கு இன்னும் சற்று நெருங்கிக் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் அழைக்கிற வண்ணமாக இதை மரணம் என்று அழைக்க முடியாது. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அவர் மரித்த யவீருவின் குமாரத்தியைக் குறித்து அவள் மரித்துப் போகவில்லை. நித்திரையாயிருக்கிறாள் என்றார். அவரைக் கேலி செய்து சிரித்தார்கள். அவள் மரித்துப் போனாள் என்பதே அவர்களுடைய புரிந்துகொள்ளுதலாய் இருந்தது. அவள் மரித்துப்போனாள். ஆனால் இயேசுவோ “அவள் நித்திரையாயிருக்கிறாள்” என்றார். அதன் பிறகு அவர் உள்ளே சென்று அவளை எழுப்பினார். அவள் மறுபடியும் ஜீவனைப் பெற்றுக் கொண்டாள். 23இப்பொழுது, ஆதாமிலிருந்து இதுமட்டுமாக மனிதன்; தனக்கென்று ஒரு பதிலியைக் கொண்டு தன்னுடைய சொந்த வழியிலே போக முயற்சிக்கிறான். தேவன் அப்பொழுது எந்த வழியை வைத்தாரோ அதைக் காட்டிலும் மனிதன் சிறிது சிறப்பாகச் செய்யும்படி அவனால் முடிந்த வரை முயற்சிக்கிறான். அது மனிதனுடைய சுபாவமாய் இருக்கிறது. அவன் எப்பொழுதுமே சிறிது வித்தியாசமாய் காரியங்களைச் செய்து தற்போது செய்கிறதைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறான். அவன் தேவனுடைய திட்டத்தில் தன்னுடைய எண்ணங்களைப் புகுத்த விரும்புகிறான். ஆதலால் தான் இன்றிரவு இவ்வுலகில் கிறிஸ்தவ மக்கள் ஸ்தாபன தடைகளினாலே பிரிந்திருக்கிறார்கள். இது இப்படி இருக்கக் காரணம் என்னவென்றால், மனிதன் தன்னுடைய எண்ணத்தை தேவனுடைய திட்டத்திற்குள்ளாகப் புகுத்திவிட்டதே காரணமாகும். ஆதாமிலிருந்து இன்றுமட்டும் அது நான் சொன்ன விதமாகவே இருக்கிறது. ஆதாம் ஏதேன் தோட்டத்தில் தேவனை சந்திக்கும்படி அத்தி இலையில் தனக்கு ஆடையை உண்டுபண்ணி அதைஉடுத்திவித்து மனிதனின் சிந்தையை வெளிப்படுத்தினான். அது அவனாகவே தனக்கென்று செய்து கொண்ட காரியம். அத்தி இலையில் துவங்கி தொடர்ச்சியாக கல்வியினாலும், கோபுரங்களையும், நகரங்களையும், விக்கிரகங்களையும், நாகரீகத்தையும், ஸ்தாபனங்களையும் கொண்டு முயற்சித்தார்கள். எப்படியிருந்தாலும், தேவன் எப்பொழுதுமே தன்னுடைய இரத்தத்தின் அடிப்படையில் தன் பிரஜைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறவராய் இருக்கிறார். அது எப்பொழுதும் அந்த விதமாகவே இருக்கும். அவ்வளவு தான் காரியம். 24கல்வியானது முற்றிலுமாய் தோல்வியடைந்தது. எவ்வளவு அதிகமாய் படிக்கிறோமோ அவ்வளவு அதிகமாய் ஒருவருக்கொருவர் விலகி தூரம் போகிறோம். ஸ்தாபனமானது முற்றிலும் தோல்வியடைந்ததாய் இருக்கிறது. ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்களுக்கென்று ஒரு வரைமுறையை வைத்து தடைகளைப் போடுகிறார்கள். மற்ற ஸ்தாபனத்தைக் காட்டிலும் தன்னுடைய ஸ்தாபனம் உயர்ந்தது எனக்காட்டி அங்குள்ள ஐக்கியத்தை உடைக்கிறார்கள். மற்றும் நாகரீகம் ஒட்டுமொத்தமாய் குழப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது. நகரங்கள், கோபுரங்கள் இன்னும் எல்லாமே தோல்வியடைந்தன. ஆனால் தேவனுடைய திட்டமோ இன்னும் மாறாததாய் எப்பொழுதும் இரத்தத்தின் மூலமாகவே இருக்கிறது. இந்த இரத்தமானது வெளிப்படையாய் காணப்படவேண்டும். பூர்வ நாட்களில் இஸ்ரவேல் மக்கள் ஆட்டுக்குட்டியைக் கொன்று அவர்களுடைய வாசலின் நிலைகால்களில் பூசவேண்டும்; என தேவன் கோரினார். அது நீ யாராக இருந்தாலும் சரி, அந்த அடையாளமானது அங்கே இருக்கவேண்டும். ஒருவேளை அந்த மக்கள் “நாங்கள் யெகோவா சொல்லுகிற எல்லா வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்”, என்று அறிக்கையிட்டிருக்கலாம். அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்ட இஸ்ரவேலர்கள் என்று காண்பித்தாலும், அதை அறிக்கை செய்தாலும்; அது அவர்களை அந்தக் காரியத்திற்குப் புறம்பாக்காது. அந்த அடையாளத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். இரத்தமானது காணப்படவேண்டும். இன்றிரவு அந்த விதமாகத் தான் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உலக காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும் யாராக இருந்தாலும், அதை வெளிப்படுத்தியாக வேண்டும். 25அந்நேரத்தில் அந்த அடையாளமானது நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்க வேண்டும். கட்டாயமாக அது அங்கே இருக்கவேண்டும். அவர்களுடைய வீடு எவ்வளவுதான் தேவ பக்தியுடையதாய் இருந்தாலும் சரி; அந்த மக்கள் எவ்வளவுதான் தேவ பக்தியுடையவர்களாய் இருந்தாலும்; அவர்களுடைய பிள்ளைகள் எவ்வளவு தான் அருமையாய் வளர்ந்திருந்தாலும் சரி; எவ்வளவு அருமையான சபைக்குச் சென்றிருந்தாலும் மற்றும் தேவன் சொன்ன எல்லா காரியங்களையும் செய்திருந்தாலும் இன்னுமாய் மரணமா? ஜீவனா? என்கிற கடைசி மணி வேளையில் இரத்தம் காண்பிக்கப்பட வேண்டும். இரத்தமானது எதை காட்டுகிறதென்றால், பாவமறியாத பதிலியான ஒன்று ஆராதிக்கிறவர்களுடைய இடத்தை எடுத்துக் கொண்டது என்று காட்டுகிறது. அந்த நிலைக்கால்களில் பூசப்பட்ட சிவந்த இரத்தத்தின் ரசாயனமே அந்த வீடு பாதுகாக்கப்பட்டதற்கான அடையாளம். அது நடக்க இருக்கும் காரியங்களுக்கு அடையாளமாய் இருந்தது. 26இந்த கடைசிக் காலத்தில் தேவன் தன்னுடைய சபையை விடுவிக்கிற நேரத்திற்குத் திரும்ப வந்திருக்கிறோம். அப்படித் தான் நான் விசுவாசிக்கிறேன். அந்த இரத்தமானது எப்படி ஒரு நினைவுச் சின்னமாக கொடுக்கப்பட்டிருந்ததோ? அப்படியாகவே அந்த அடையாளமும் இருக்க வேண்டும். இன்றைக்கும் அது தேவையாய் இருக்கிறது. இப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்திலிருந்த இரசாயனத்தை அவர்களால் எடுத்து ஒவ்வொரு இருதயத்தின் வாசலிலும் பூச இயலாது. பாருங்கள்,அந்த நாட்களில் ஆட்டுக்குட்டியானது கொல்லப்பட்டது. அந்த மிருகம் மரித்தது என்று காட்டும்படிக்கு அதினுடைய இரத்தமானது நிலைக்கால்களில் பூசப்பட்டிருந்தது. விலங்குகளுக்கு ஆத்துமா இல்லாததினால் அதினுடைய ஜீவனானது ஆராதிக்கிறவர்கள் மேல் வரமுடியாமல் போனது. 27ஆனால் இன்றைக்கோ நம்முடைய மன்னிப்பிற்காகவும், விடுதலைக்காகவும் கல்வாரியில் சிந்தப்பட்ட தேவனுடைய சொந்தக் குமாரனின் இரத்தத்திற்குள்ளாக இருந்த ஜீவனானது தேவனேயன்றி வேறொன்றும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் தம்முடைய (அவருடைய) சபையின் மேலும், விசுவாசியின் மேல் திரும்பி வந்திருப்பதே இந்தக் கடைசி நாட்களில் அடையாளமாய் இருக்கிறது. அவர் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை தன்னுடைய பதிலியாய் ஏற்றுக் கொண்ட புருஷனையும் ஸ்திரீயையும் காணும்போது அவர் கடந்து போகிறார். பரிசுத்த ஆவியானவர் தாமே அதற்கு சாட்சிக் கொடுக்கிறார். நீங்கள் ஒரு வேளை, “நான் அதை ஏற்றுக் கொண்டேன்” என்று சொல்லி இன்னுமாக உலகத்திலும், உலகத்தைப் போலும் ஜீவித்தால்; அந்த ஜீவன் உங்களுக்காகத்தான் என்கிற அத்தாட்சி இல்லை; மேலும், பரிசுத்தாவி உங்கள் ஜீவியத்தைத் தொட்டதற்கான அத்தாட்சியுண்டாகும் வரை ஒன்றுமில்லை. இந்த கடைசி நாட்களில் ஒவ்வொரு புருஷனும், ஸ்திரீயும் அந்த அடையாளமாகிய அத்தாட்சியையே கட்டயமாகப் பெறவேண்டும். “நான் அந்த இரத்தத்தை காணும்போது”, இதுவே தேவனுடைய கோரிக்கையாய் இருக்கிறது. 28“ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் ” என்று இயேசு சொன்னார். ஆகவே தேவனுடைய திட்டம் எப்பொழுதும் இரத்தத்தின் மூலமாகவே இருக்கிறது. பழைய ஏற்பாட்டிலும் இரத்தமாகத் தான் இருந்தது. புதிய ஏற்பாட்டிலும் இரத்தமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இருந்த அந்த இரத்தத்திலிருந்த இரசாயனமானது வரப்போகிற காலத்திற்கு ஜீவனின்அடையாளமாய் இருந்தது. இது ஒருவருடைய பதிலியை எடுத்துக் கொண்டது என்று காட்டுகிறது.ஆனால் பலி செலுத்துகிறவனோ ஆட்டுக்குட்டியை பலியிட்ட பிறகு அவன் எப்படி வந்தானோ அந்தவிதமாகவே குற்ற உணர்வோடு திரும்பிச் செல்லுகிறான். ஆனால் இந்த வழியிலோ, பலி செலுத்துகிறவன் ஒரு முறை பாவத்திலிருந்து நீக்கப்படுவான் என்றால் அவனுக்கு அதன்பிறகு குற்ற உணர்வே இருக்காது. அந்தக் காரியம் முற்றிலும் மரித்து கடந்துபோய் மரணத்திற்கு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசிப்பீர்கள். நீங்கள் மறுபடியும் நித்தியமாய் ஜீவனோடு கிறிஸ்து இயேசுவிற்குள் ஜீவிப்பீர்கள் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வீற்றிருந்து மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தைக் கொண்டு வருவார். ஏனென்றால் வேதமானது எபிரேயர்:13:8-ல் “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”, என்று கூறுகிறது. தேவன் தாமே அவருடைய சபையானது; ஸ்தாபனங்கள், கோட்பாடுகள், இனங்கள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, எந்தப் பாகுபாடுமின்றி முழு சபையாக இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற நிலைக்கு வரும்படி காத்துக் கொண்டிருக்கிறார். “இன்னும் கொஞ்ச காலத்திலே” இவ்விதமாக, “இந்த உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியால் நீங்களும் பிழைப்பீர்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்றார், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராயிருக்கிறார். 29சிலசமயம் தங்களை பரிசுத்தர்கள் எனக் கோரும் சில புருஷர் களையும், ஸ்திரீகளையும் காண்கிறேன். அவர்கள் சாட்சிகளாய் நிற்பதற்கு வெட்கப்படுகிறார்கள். “ஆமென்” என்று சொல்லுவதற்கும் வெட்கப்படுகிறார்கள். சீயோன் கீதங்களைப் பாடுவதற்கும் வெட்கப்படுகிறார்கள். எல்லா இடத்திலும் வெட்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நானோ, இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாத கூட்டத்தார் மத்தியில் இருக்க விரும்புகிறேன். அது பார்ப்பதற்கு அவர்களுக்கு மத வெறியைப் போன்று இருந்தாலும் அதைக் குறித்து வெட்கமடையாதவர்களாய் இருக்கிறார்கள். ஏதோ ஒரு காரியம் அவர்களுடைய ஜீவனைக் காட்டிலும் மேலானதாய் இருக்கும்படி நடந்தேறினது. அதுவே அவர்களுடைய ஜீவனாக இருந்தது. அவர்கள் தேவன் அனுப்பின பதிலியை ஏற்றுக் கொண்டதினால் அது அவர்களுக்கு நித்திய ஜீவனாய் இருந்தது. 30நான் இந்த விதமாக பாடுவதை விரும்புகிறேன்... சில நிமிடங்களுக்கு முன்பாக இங்கே கொண்டுவரப்பட்ட சிலருக்காய் உள்ளே ஜெபித்துக் கொண்டிருந்த போது; பாடல்களையும் கை தட்டும் ஓசையையும் கேட்டுக் கொண்டிருந்தேன். (இது ஜெப ஆராதனை இல்லை, வெறும் பேசும்படியே வந்தேன்). அதில் சிலர் அறையிலே மேலும் கீழுமாக ஓடுகிறதைக் கண்டு அதை “ஆவியில் நடனமாடுகிறார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். முதலிலே அந்த பெந்தெகொஸ்தேயர்கள் ஆவியிலே நடனமாடினதைப் பார்த்தபோது கடுமையாக விமர்சனம் செய்தேன். இது என்ன இது? “ஒரு பைத்தியக்காரக் கூட்டம்” என்று நினைத்தேன். பிறகு நான் வேதத்தை வாசித்தபோது ஆவியிலே நடனம் ஆடுகிறது உண்மை என்று அறிந்தேன். அதை பிசாசானவன் திருடி, “ராக் அண்ட்ரோல்” மற்றும் அது போன்று காரியங்களோடு இதை சேர்த்துவிட்டான். ஆனால் அசலான நடனம் தேவனிடத்திலிருந்து வருகிறது. அது நிச்சயமாக உண்மை. நடனம் எப்பொழுதுமே ஜெயத்தைக் குறிக்கிறது. 31அந்த சிவந்த மேனியையுடைய சிறு தாவீது இராட்சத கோலியாத்தை வீழ்த்தி அவனுடைய தலையை பட்டணத்துக்குள்ளாகக் கொண்டு வந்த போது, மக்கள் அங்கே நடனமாடி அவனைச் சந்தித்தார்கள். அவர்கள் ஜெயத்தைப் பெற்றிருந்தார்கள். மோசே தேவனுடைய வல்லமையினால் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து இஸ்ரவேல் ஜனங்களை அக்கரைக்குக் கொண்டு வந்தபோது, மிரியாம் தன் கையிலே தம்புரை எடுத்து; இஸ்ரவேலிலுள்ள எல்லா குமாரத்திகளோடும் சேர்ந்து கரையோரமாய் தம்புரோடும் நடனத்தோடும் ஆவியினாலே முன்னும் பின்னுமாய் நடனமாடினார்கள். அந்த விதமான பண்டைய கால கூட்டமாக இல்லை என்றால் வேறொன்றை நான் வாழ்கையில் பார்க்கவில்லை. போதுமான அளவு வெற்றி இல்லாததற்குத் தவறு என்னிடத்தில் இருந்ததே காரணம். ஆனால் கடைசியாக அந்த ஜெயத்தைப் பெறும்பொழுது, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளம் உன் மேலாக வரும். 32வேதத்தின் மகத்தான சங்கீதக்காரனாகிய தாவீதை நான் நினைவு கூருகிறேன். அவன் ஒரு பெரிய காரியத்தைசாதித்த போது சவுலின் குமாரத்தியானவள் கொடுக்கப்பட்டாள். அவளோ வணங்காக் கழுத்துள்ளவளாய், சுய விருப்பமுடையவளாய், பாவனை விசுவாசியைப் போல் இருந்தாள். அப்பொழுது உடன்படிக்கைப் பெட்டியானது தேவனுடைய சமுகத்திலிருந்து அனேக நாட்கள் தூரமாகப் போயிருந்தது. தேவனுடைய பிரசன்னம் காணக் கூடியதாக அக்கினி ஸ்தம்பமாக உடன்படிக்கைப் பெட்டியின்மேல் இருந்தது. பெலிஸ்தியர்கள் அதை சவுல் அரசாண்டபோது எடுத்துச் சென்றார்கள். அதன்'பிறகு ஒரு நாள் பெட்டியானது தேவனுடைய வீட்டிற்குள் திரும்பி வருவதை தாவீது பார்த்தபோது, அவன் அந்த பெட்டிக்கு முன்பாக ஓடி தேவனுடைய சமுகத்திலே நடனமாடி, பாடி, துதிகளை ஏறெடுத்தான்.அதைப் பார்த்த சவுலின் குமாரத்திக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவளுடைய வாலிபமான அழகான புருஷன் தன்னுடைய ஆடைகள் கிழிந்தவாறு ராஜாவின் குமாரத்திக்கு முன்பாக நெறிமாறிய நிதானத்தில் நடந்து கொண்டான். தாவீது அவளிடம் “உனக்கு அது பிடிக்கவில்லை என்றால் கொஞ்சநேரம் இதைக் கவனி” என்று கூறி, உடன்படிக்கைப் பெட்டியைச் சுற்றிச் சுற்றி மீண்டும் மீண்டும் மீண்டுமாக ஆவியில் நடனமாடினான். அவளோ அதைக் குறித்து வெட்கப்பட்டாள். அதனால் அவளை தேவன் ஒரு சாபத்தால் சபித்தார். ஓ, கிறிஸ்து உயிர்தெழுதலின் அடையாளமாக அவருடைய சபையிலே ஜீவிக்கிறதே அவருடைய இரத்தத்தின் மூலமாகக் கிடைத்த வெற்றியாக இருக்கிறதே. அவருடைய இரத்தத்தைத் தவிர நாம் ஐக்கியங் கொள்ளுவதற்கு வேறு வழியில்லை. நம்முடைய ஸ்தாபனங்கள் மற்றொரு ஸ்தாபனத்தைப் பார்த்து, “அது புத்திகெட்ட காரியம்” என்றும்; அது, இது என்றும் சொல்லி நம்மைப் பிரித்து விடுகிறார்கள். 33பெந்தெகொஸ்தே நம்முடைய மாதிரியாய் இருக்கிறது. பெந்தெகொஸ்தே நாளன்று சபை எதை நிறுவினதோ அதைத் தவிர வேறொன்றையும் யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மேல் வந்த பரிசுத்த ஆவியானவர் தாமே மற்றும் வேதத்தில் எங்கெல்லாம் வந்தாரோ அங்கெல்லாம் மக்கள் ஒரே விதமாக கிரியை செய்தார்கள். அது ஒரு போதும் தவறினதில்லை. இப்படியாக இதை சொல்லட்டும். இதுவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றி கேட்டிராத அந்நிய நாடுகளில்இருக்கும் தீவுகளைச் சுற்றி இருக்கிற ஜனத்தாரிடத்திலும், பழங்குடியினர் மத்தியிலும் பேசும்படி எனக்கு ஒரு தருணம் கிடைத்தது. அப்பொழுது ஒரு மொழி பெயர்ப்பாளரைக் கொண்டு அவர்களிடம் பேசினேன். அவர்களிடம் நடந்த சம்பவங்ளையெல்லாம் சொல்லிக் கரங்களை உயர்த்தி பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது, நீங்கள் இங்கு எப்படியாக பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது கிரியை செய்கிறீர்களோ, அவர்களும் அதே விதமாக செய்தார்கள். இது எதைக் காட்டுகிறதென்றால், முழு உலகத்திற்கும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது என்று காட்டுகிறது. அது செவ்விந்தியர்களோ, கருப்பு இனத்தாரோ, வெள்ளை இனத்தாரோ, யாராக இருந்தாலும் சரி, இது சர்வ வல்லமையுள்ள தேவனுடையவல்லமையின் அடையாளமாய் அவர்களுடைய பிள்ளைகளின் மேல் வெளிப்படுகிறது. அவர்கள் ஐக்கியம் கொள்ளும்படி கொடுக்கப்பட்ட ஒரே இடம் இதுதான். 34நிம்ரோத் கோபுரத்தைக் கட்டினான்; நேபுகாத்நேச்சார் பட்டணத்தைக் கட்டினான்; மற்றும் அதுபோன்று அநேகமாய் செய்தார்கள். விஞ்ஞானிகள் மூலமும் மற்றும் எல்லாக் காரியத்தையும் கொண்டு செய்தார்கள் ஆனால் எப்பொழுதுமே நமக்கு இரத்தமே அதைச் செய்கிறதாய் இருக்கிறது. குற்றவாளியான மனிதன் மன்னிப்பை பெறுவதற்கு அவனுடைய இடத்தை மாசற்ற, குற்றமில்லாத பதிலியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தேவன் எடுத்த தீர்மானம். அது இன்றிரவு கூட மாறாமல் அப்படியே இருக்கிறது. யோபு அதன் மூலமாக ஜீவித்தான். வேதத்தில் இருப்பதிலேயே பழைய புத்தகம் யோபுவின் புத்தகமாகும். அவனுக்கு எல்லா சோதனைகள் நேரிட்டபோதிலும், அவன் திடமாக நின்றான், ஏனென்றால் அவன் யேகோவா கோரின எல்லாவற்றையும் நிறைவேற்றினான் என்பதை அறிந்திருந்தான். அது சரி என்று அறிந்திருந்தான். ஆபிரகாமும் அந்த விதமாகவே செய்தான். மற்றும் அநேகர் அப்படியாய் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் ஐக்கியம் கொள்ளும்படியாக அவர்களுக்கு ஒரே இடம் மாத்திரம் இருக்கும் என்றால் அது சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே. “எருசலேமில் மக்கள் எங்கும் தொழுதுகொள்ள வேண்டியதாய் இருந்தது. ஆனால் பலி இல்லாத பட்சத்தில், அங்கே எந்த தொழுகையும் இருக்காது. மற்றும் அந்த பலி இரத்தத்தின் பலியாய் இருக்கவேண்டும். 35இன்றோ நாடு முழுவதும் மக்கள் படித்தவர்களாய் மிகவும் பண்புள்ளவர்களாய்; அணுக்களைப் பிளக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தேர்ந்தவர்களாய்; சந்திரனுக்கு ராக்கெட்டுகள் அனுப்பி அல்லது செயற்கைக் கோள் அனுப்புகிறவர்களாய் இருக்கிறார்கள். மற்றும் இந்த எல்லா அறிவியல் ஆராய்ச்சிகளும் நம்முடைய எல்லா ஸ்தாபனங்களும், எல்லா கல்வியும், நம்முடைய எல்லா பள்ளிகளும் தேவனிடத்தில் முன்பு நாம் நெருங்கி இருந்ததைக் காட்டிலும் வெகு தூரமாக நம்மைக் கொண்டு சென்றுவிட்டது. சர்வவல்லமையுள்ள தேவனிடத்திற்கு, அவருடைய சித்தத்தின்படி தன்னுடைய இருதயத்தை முழுமையாக ஒப்படைக்கும் போது மாத்திரமே பரிசுத்த ஆவியானவர் அவன் மீது ஒருஅடையாளமாக இறங்குவார். “விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்பது எப்பொழுதும் அந்தவிதமாகவே இருக்கிறது. “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மற்றும் விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்று கிறிஸ்து கூறினார். கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியும் ஜீவனும், அந்த ஆராதிக்கிறவன் மேல் வருகிறதே பரிசுத்த ஆவியின் பிரத்தியட்சமாகுதலும் மற்றும் தேவன் அவனை ஏற்றுக் கொண்டார் என்பதற்கான அடையாளம். 36அந்த பண்டையகாலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக ஒரு யூதனை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அந்த பரிகாரம் செலுத்துகிற நாளிலே, பலி செலுத்தும் படியாக ஒரு அருமையான கொழுத்த காளையைக் கொண்டு செல்லுவான். அதுவே யேகோவாவின் கோரிக்கையாக இருந்தது, அல்லது ஒரு வேளை அவன் ஒருஅருமையான கொழுத்த ஆட்டுக் குட்டியைக் கொண்டு சென்றிருக்கலாம். அதை ஆசாரியன் களங்கமில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதாயிருக்கிறது. பிறகுஅவன் தொழுகை செய்கிற இடத்திற்கு சென்று அவன் செய்த எல்லா தவறுகளையும் எண்ணி தான் ஒருபாவி என்று உணருவான். பிறகு அவனுடைய கைகளை அந்த பலியின் மேலாக வைப்பான். அப்படியாக அவன் அந்த பலியின் மேலாக கைகளை வைக்கும் போது, அவன் அந்த பலியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். அதன் பிறகு அது கொல்லப்பட, அதனுடைய தொண்டை வெட்டப்படும் போது இரத்தமானது அவனுடைய கைகளில் பீய்த்து அடிக்கும்; அதனுடைய ஜீவன் எடுக்கப்படும் அப்பொழுது அவனுடைய கைகளை அதின் மேல் வைத்திருக்க அவன் அந்த வலியை உணர்ந்து அந்த மிருகம் தன்னுடைய இடத்தை எடுத்துக் கொள்கிறது என்பதை உணருவான். அதன் பின் அவன் நீதிமானாக்கப்பட்டவனாய் கடந்து செல்லுவான், ஏனென்றால் அவன் கச்சிதமாக யேகோவா கோரின எல்லாவற்றையும் செய்தான். 37இன்றும் கிறிஸ்தவர்களிடத்தில் அதே காரியம்தான் இருக்கவேண்டும். ஏதோ ஒரு அட்டையிலே இத்தனை நாள் அல்லது இந்த வருடத்திலே இத்தனை ஞாயிற்று கிழமை, நான் ஞாயிறு பள்ளிக்கு வருகிறேன் என்று கையெழுத்திடுவதல்ல. அல்லது, ஆறு மாதங்கள் நான் மது அருந்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பதினால் அல்ல. அதெல்லாம் அல்ல. கல்வாரியில் தேவனால் அருளப்பட்ட பலியாகிய, இயேசுவாகிய தலையின்மேல் கைகளை வைப்பதும், சரீரத்தில் உண்டாகும் கண்ணீரோடு அதை உணர்வதுமே மன்னிப்பாகும். அதன் பின் அவர் மரித்து உயிரோடு எழுந்ததைப் போல உத்தமத்தோடு நீங்களும் அவருடைய நாமத்திலே அடக்கம் பண்ணப்பட்டு புதிதான ஜீவியத்திற்கு எழும்பி கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் நடக்கும்படி அவரோடு ஞானஸ்நானத்திலே இனங்கண்டு கொள்ளப்படுகிறீர்கள். 38அவன் இப்படியாக யேகோவா கோரின காரியங்களைச் செய்யும் போது தான் நீதிமானாக்கப்பட்டான் என்று உணருகிறான். இப்பொழுது ஒரு யூதன், யேகோவா கோரின எல்லாவற்றையும் செய்யும் போது நீதிமானாக்கப்பட முடியும். அது சரியே. அவன் யேகோவா என்ன கோரினாரோ அதையே செய்தான். ஆனால் கடைசியில் அது ஒரு குடும்ப பாரம்பரியமாக மாறிவிட்டது. பாவநிவர்த்தி நாள் வந்த போது ஒரு வேளை அவர்கள் தவறாகக் காரியங்களைச் செய்திருக்கலாம். “சரி, இது பாவ நிவர்த்தியின் நாள் என்று விசுவாசிக்கிறேன், ஆதலால் என்னுடைய ஆட்டுக் குட்டியை அங்கு கொண்டு செல்லட்டும்” என்று சொல்லி உத்தமத்தோடு செல்லவில்லை. அது ஒரு குடும்ப பாரம்பரியமாக மாறிப் போனது. “எல்லா குடும்பமும் அப்படித்தான் செய்கிறது, ஆகவே நாமும் அப்படியே செய்தாக வேண்டும்” என்று சொல்லி அவர்களுடைய குடும்பத்தினர்கள் எந்த விதமாக செய்தார்களோ அவர்களும் அதையே செய்தார்கள். சரியாக கிறிஸ்தவமும் அதே நிலையைத் தான் அடைந்தது. நம்முடைய பெந்தெகொஸ்தே இயக்கங்களெல்லாம் சரியாக அந்த விதமாகத் தான் மாறிக் கொண்டு வருகிறது. அது ஒரு குடும்ப பாரம்பரியம். பாருங்கள்? நாமும் நம்முடைய பலியோடு மரித்தோம் என்று அடையாளங்கண்டு கொள்ளுகிறதில்லை. நாம் அப்படியாக “ஓ, நான் ஒரு சபைக்குச் சென்று சேர்ந்து கொண்டதினால் கிறிஸ்தவனாகிறேன்” என்று சொல்லுகிறோம். சபையில் சேர்ந்து கொள்ளுவது நல்லது தான். ஆனால் நீங்கள் அவர் மேலாக கையைவைத்து அவரோடு அடையாளங் கண்டு கொள்ளுமட்டும்; மற்றும் நீங்கள் அவரோடு ஒன்றாகும் மட்டும்; நீங்கள் தேவனுடைய குமாரனும் குமாரத்தியாக மாறும்மட்டும்; கிறிஸ்துவின் ஆவி உங்களுக்குள் வரவும்; நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாகும் மட்டும் நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. இன்றைக்கும் கிறிஸ்தவனாய் மாறுவதென்பது ஒரு சடங்காச்சாரமாய் இருக்கிறது. காணப்பட வேண்டிய அந்த உத்தமம் அங்கே காணப்படவில்லை. 39இங்கு சில நாட்களுக்கு முன்பு ஜெபவரிசையில் வந்த ஒரு வாலிப பெண்ணிடம் “நீங்கள் கிறிஸ்தவர்களா?”என்று கேட்டேன். அதற்கு அவள், “நல்லது, நீங்கள் புரிந்து கொள்ளும்படியாய் சொல்லட்டும், நான் ஒரு அமெரிக்கன்”என்றாள். இப்பொழுது, ஒரு அமெரிக்கனாக இருப்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டோ? ஒருஅமெரிக்கனாக இருப்பது மிகவும் அருமையான காரியம்தான். ஆனால் அதற்கென்று நீ கிறிஸ்தவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நீ மறுபடியும் பிறக்க வேண்டும். மற்றொரு ஸ்திரீயை இப்படியாய் கேட்டேன் “நீ ஒரு கிறிஸ்தவளா?” அது ஏனோ அவளை தரக்குறைவாக்கினதைப் போன்று உணர்ந்தவளாய் “நீர் புரிந்து கொள்ளுகிறபடியாக சொல்லட்டும், நான் ஒவ்வொரு இரவும் மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்” என்று. அதற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதைப் போன்று சொன்னாள். நீங்கள் கிறிஸ்துவோடு இனங்கண்டு கொள்ளப்பட வேண்டும். அவருடைய ஜீவன் உங்களுக்குள்ளாக ஜீவிக்கவேண்டும். கிறிஸ்து உங்களுக்குள்ளாக ஜீவிக்கும் போது மாத்திரமே நீங்கள் கிறிஸ்துவோடு அடையாளங்கண்டு கொள்ளமுடியும். ஏதோ ஒரு சடங்காச்சாரமான காரியம் செய்கிறதினால் அல்ல. ஏதோ ஒரு சபையை சேர்ந்து கொள்வதினால் அல்ல. அதெல்லாம் சரிதான், ஆனால் அந்த அசலான உத்தமத்தைப் பாருங்கள்... 40நாம் சுகமளிக்கும் ஆராதனைக்கு வரும்போது, நீங்கள் வரிசையில் வந்து கொண்டிருப்பவர்களிடத்தில், வகையறுத்துச் சொல்லுகிறதை கவனித்திருப்பீர்கள் என்றால்; தொடர்ச்சியாக அவர்களை “மனந்திரும்பும்படி” சொன்னது. பார்த்தீர்களா... நம்முடைய ஜெபங்களெல்லாம் ஒரு பாரம்பரியமாய் மாறிப்போனது. இரவிலே முழங்கால்படியிட்டு “தேவனே, இதை அதை ஆசீர்வதியும், இவர்களை அவர்களை ஆசீர்வதியும், இதைச் செய்யும், ஜானுக்கு இதையெல்லாம் செய்யும்படி உதவிசெய்யும்” என்று சொல்லுகிறோம். இப்படி செய்கிறதினால் நீங்கள் தேவனை ஒரு அதிர்ஷ்ட சின்னமாக அல்லது ஒரு வேலைக்காரப் பையனைப் போல செய்கிறீர்கள். “தேவனே, இதை செய்யும். மற்றும் இதைச் செய்யும். மற்றும் நீர் இதைச் செய்யும்.” என்று சொல்லுகிறோம். ஆனால் இயேசுவானவர் நமக்கு இந்த விதமாக ஜெபிக்கும்படி சொல்லிக் கொடுக்கவில்லை. அவர் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம்வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி சொன்னார். ஆனால் நாமோ, தேவன் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவருக்கு நாம் கட்டளையிடுகிறோம். அந்த காரணத்தினால் தான் சபையானது மிகவும் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது. ஆகையால் தான் மகத்தான எழுப்புதலானது சமீபத்தில் தேசத்தை தாக்கின போது லட்சக்கணக்கானவர்களை சபைக்குள் வழி நடத்தினது. ஆனால் இவர்களோ இந்த அனுபவங்களைக் கொண்டு தேவனுக்கு அடுத்த துக்கத்தோடு இருப்பதற்குப் பதிலாக அதை ஒரு சடங்காக மாற்றிப் போட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளாக கிரியை செய்து புதிய ஜீவனை சிருஷ்டித்து சபையிலிருந்து விலகி இருக்க முடியாத அளவிற்குபசி தாகம் ஏற்படுவதற்கு அனுமதிப்பதில்லை. அது தான் காரியம். ரசீதிலே கையெழுத்திட்டு சேருவதோ, அதைப் போன்றவைகளோ அல்ல. அது நீங்கள் முன்னோக்கி தொடர்ந்து செல்வதற்கு அங்கு கிறகிறிஸ்துவின் ஜீவியத்தைக் கொண்டிருப்பது தான். உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று உங்களை உந்தித்தள்ளுகிறது. 41நேற்றைய தினத்தில் ஒரு வாலிபனோடு நேர்காணலில் பேசிக் கொண்டிருந்த போது, அவனிடத்தில் “நான் இந்தியானாவில் மிருகங்களைப் பாதுகாக்கிற காவலனாய் இருந்த போது ஒரு சிறிய ஊற்றண்டை கடந்து செல்வது வழக்கம்” என்று சொன்னேன். அப்பொழுது அங்கே... என்னுடைய வாழ்நாளில் பார்த்ததிலே சந்தோஷமான ஊற்றாய் அது இருந்தது. அவைகள் இந்தியானாவிலே பெரிய ஊற்றாய் குளிர்ந்த சுண்ணாம்பு தண்ணீரில் நீர்க் குமிழிகள் மேலே பொங்கிக் கொண்டிருக்கும். ஒரு நாளில் அந்த ஊற்றண்டை பேசும்படியாக அதன் அருகாமையில் உட்கார்ந்தேன். மோசே எப்படியாக எரிகிற புதரண்டையில் பேசும்படி உட்கார்ந்திருப்பானோ அந்த விதமாக உட்கார்ந்தேன். அதினிடத்தில் “சிறிய ஊற்றே, நீ எல்லா நேரமும் பொங்கிக் கொண்டிருக்கும்படி உன்னை சந்தோஷமாய் வைத்தது எது? நான் குளிர் காலத்தில் வரும் போதும், நீ பொங்கிக் கொண்டிருக்கிறாய். வசந்த காலம் வரும் போதும், கோடைக் காலம் வரும் போதும், இலையுதிர்காலம் வரும் போதும்,எப்போது வந்தாலும் நீ பொங்கிக் கொண்டிருக்கிறாய். ஒரு வேளை முயல்கள் உன்னிடத்திலிருந்து தண்ணீர் குடிப்பதினால் நீ சந்தோஷப் படுகிறாயோ?” என்று கேட்டேன். நல்லது, இப்போது அதினால் பேச முடியும் என்றால்,“இல்லை, அது அல்ல காரணம்” என்று சொல்லியிருக்கும். சரி, ஒரு வேளை மான்கள் உன்னிடம் வந்து தண்ணீர் குடிப்பதினாலோ?என்று கேட்டிருப்பேன். இல்லை, “அது அல்ல காரணம் என்று சொல்லியிருக்கும்”. நான் இப்படியாக “சரி, ஒருவேளை நான் இங்கு வந்து சமயம் வாய்க்கும் போது உன்னிடத்தில் தண்ணீர் குடிக்கிறதினாலோ?” என்று கேட்டிருப்பேன். “இல்லை, அதெல்லாம் காரணம் இல்லை. அவைகளெல்லாம் என்னிடத்திலிருந்து தண்ணீர் குடிப்பதினால் சந்தோஷப்படுகிறேன், ஆனால் அதல்ல என்னை எல்லா நேரத்திலும் பொங்கும்படி செய்வது”. சரி அப்படியென்றால் உன்னைப் பொங்கிவரும்படி செய்கிறது எது? உன்னை இவ்வளவு சந்தோஷமாய் வைக்கிறது எது? எப்போதுமே பொங்கிக் கொண்டிருக்கிறாயே? அதினால் பேசமுடியுமானால், “அது நான் அல்ல”. எனக்கு பின்னால் இருக்கிற ஏதோவொன்று என்னை உந்தித்தள்ளுகிறது என்று சொல்லும். 42அந்த விதமாகத் தான் கிறிஸ்தவ அனுபவமும் இருக்கிறது. நீங்கள் ஏதோ முயற்சி செய்து நடப்பிக்கிற காரியம் இல்லை. அது உங்களுக்கு பின்பாக இருந்து ஏதோ கிரியை செய்கிற காரியமாய் இருக்கிறது. நித்திய ஜீவனே உங்களை உந்திமேலே வேகமாய் தள்ளுகிறது. அவர் அந்த கிணற்றண்டை இருந்த ஸ்திரீயினிடத்தில் “நான் உனக்கு கொடுக்கும் தண்ணீர் உனக்குள்ளே நித்திய ஜீவிய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று சொன்னது போன்றதாய் இருக்கும். இது அந்த பலியிடுகிறவனுக்குள்ளாக அவன் “அவர் ஜீவிக்கிறார்” என்று அறிந்ததினிமித்தம் தன்னை கிறிஸ்துவோடு அடையாளங்கண்டு கொள்ளும் போது இதெல்லாம் நடக்கும். இதை ஒரு சடங்காச்சாரமாக மாற்ற நாம் விரும்பவில்லை. 43இஸ்ரவேலர்கள் எப்பொழுது தேவன் தங்களுக்கு அளித்த கட்டளையின்படி செலுத்த வேண்டிய பலிகளை ஒரு சடங்காக மாற்றினார்களோ, அந்த கட்டத்தில் தான் தேவன் ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதைக் கொண்டு அனுப்பினார். சத்தியத்திற்காக தேவன் எந்த இடத்திலும், எப்படியானாலும்,எந்த காரியத்துக்கும் பயப்படாமல் கிழித்துத் தள்ளுகிற ஒரு மனிதனை எழுப்ப வல்லவராய் இருக்கிறார். எந்த இடமாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி. நீங்கள் ஏசாயா ஒன்றாம் அதிகாரத்தை வாசிப்பீர்களானால், ஏசாயா எழும்பினதை பார்ப்பீர்கள். நான் அதை இங்கே எழுதிவைத்திருக்கிறேன். ஏசாயா அவர்களிடத்தில் “உங்கள் பலிகள் (யெகோவா கோரினது) எனக்கு துர்நாற்றத்தைக் கொடுக்கிறது; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது” என்று சொன்னார். அவைகளை தேவன் வெறுத்தார். எல்லாமே தேவனால் கட்டளையிடப்பட்டவைகள் தான். ஆனால் அதை அவர்கள் சடங்காய் மாற்றிப் போட்டதினால்தேவன் அதை வெறுத்தார். தேவனுடைய வார்த்தையை நாமும் அதே விதமாக பாரம்பரியமாக, சடங்காச்சாரமாக மாற்றும்போது; அதே விதமாக நடக்கும் போது “கர்த்தர் உரைக்கிறதாவது” வரும் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் தேவன் வாக்குப் பண்ணியிருப்பாரானால், அதைஅவர் காத்துக் கொள்வார். அவர் அவருடைய வாக்குத்தத்தங்களைக் காட்டிலும் பெரியவர். அவர் எப்பொழுதும் அந்த விதமாகத் தான் இருந்து வருகிறார். ஆபிரகாம் கூறின விதமாக “அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற அவர் வல்லவராயிருக்கிறாரென்று”, அவருடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்ள அவர் எப்பொழுதும் வல்லவராய் இருக்கிறார். 44ஏசாயா இந்த விதமாக அவர்களிடம் சொன்னார். அவர்கள் செய்த எல்லா காரியத்திலும் உத்தமமில்லாமல் செய்தார்கள் என்று சொன்னார். எல்லோரும் செய்ததைக் கண்டு அவர்களும் அப்படியே செய்தார்கள். மற்றும் அவற்றை யேகோவா கோரினதால் அதைச் செய்தார்கள். குடும்பத்தில் இருந்த அவர்களுடைய அம்மா, தாத்தா, மற்றெல்லோரும் அப்படியாக செய்திருந்தார்கள். ஏன் அவர்களால் அப்படிச் உத்தமமாய் செய்ய முடியவில்லை? நாமும் கூட அப்படித்தான் செய்கிறோம். “என்னுடைய தாத்தா பிரஸ்பிடேரியன் ஆகையால் நானும் பிரஸ்பிடேரியன்”. “என்னுடைய தகப்பனார் பாப்டிஸ்ட் ஆகவே நானும் பாப்டிஸ்ட்” இன்னும் அப்படியாக சொல்லுகிறோம். மற்றும் “என்னுடைய தகப்பனார் ஒரு பெந்தெகொஸ்தேயினராக இருந்தார். ஆகையால் நானும் ஒரு பெந்தெகொஸ்தேயினன்”. அதுஅல்ல காரியம். 45நாம் இப்பொழுது தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணரக்கூடிய ஒரு நிலைக்கு வந்திருக்கிறோம். பிறகு நாம் சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக நாம் வருகிறோம். அந்த இரத்தத்தின் கீழாக மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினர்கள் மற்றும் எல்லோரும் ஒரே சமநிலையில் கூடிவருகிறோம். எந்த பாகுபாடின்றி, பாரம்பரியம், சடங்காச்சாரங்களைக் கடந்து எல்லோரும் சந்திக்கக் கூடிய ஒரே இடம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மீது மாத்திரமே. மனிதர்கள் தேவனுடைய மூல திட்டத்திற்குத் திரும்பி; அவருடைய ராஜ்யத்தில் பிறந்து, சடங்குகளிலிருந்து விலகி, சபை தன்னுடைய நிலைக்குத் திரும்பும்போது தான் ஐக்கியமானது எல்லா இடங்களிலும் ஆளுகைசெய்யும். ஏதோ சபையிலே சேர்ந்து கொள்ளுவதினால் அல்ல. மற்றும் மனிதன் தன்னுடைய வேற்றுமைகளையெல்லாம் மறந்து இரத்தத்தின் கீழ் ஒன்றாய்க் கூடி வரும் நேரத்தில், தண்ணீர் எப்படி கடல் முழுவதும் நிரம்பி இருக்கிறதோ அப்படியாய் தேவனுடைய ஆவியும் இந்த பூமி முழுவதும் நிரம்பி இருக்கும். நாம் யாவரும் பாப்டிஸ்ட் பாரம்பரியத்திலே வரமுடியாது, அல்லது பிரஸ்பிடேரியன் பாரம்பரியத்திலோ, அல்லது மெதோடிஸ்ட் பாரம்பரியத்திலோ,அல்லது பெந்தெகொஸ்தே பாரம்பரியத்தின் கீழாகவோ வரமுடியாது. ஆனால் நாம் எல்லோரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழாக ஒன்றாய்க் கூடி ஐக்கியங்கொள்ள முடியும். ஏனென்றால் இதுவே தேவனுடைய மூல திட்டமாய் இருக்கிறது. அது சரியே. ஆமென். அங்கே தான் அந்த மன்னிப்பு இருக்கிறது. 46ஒரு மெதோடிஸ்ட் நபர் பாப்டிஸட் நபரைப் பார்த்து தலையை திருப்பிக் கொண்டு போகலாம். அதே விதமாக ஒரு பாப்டிஸ்டும் பெந்தெகொஸ்தேயினரைப் பார்த்து திருப்பலாம். மற்றும் ஒரு பெந்தெகொஸ்தேயினர் பாப்டிஸ்ட் வழிமுறையை பார்த்து திருப்பிக் கொண்டு போகலாம். ஆனால் அவர்கள் சிலுவை அண்டையில் எல்லோருடைய பாவத்தையும் கழுவுகிற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தண்டையில் சந்தித்திருப்பார்கள் என்றால்; அவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டியாக இருக்கிறார்கள். அப்பொழுது அவர் நம்முடைய சகோதரன். அவர் எந்த விதமான சபையை சேர்ந்திருந்தாலும் சரி அவர் நம்முடைய சகோதரன! ஏனென்றால் நாம் எல்லோரும் சந்திக்க கூடிய ஒரே இடம் அது ஒன்று தான். இந்த வழியில் தான் தேவன் கிரியைசெய்ய விரும்புகிறார். மற்ற எல்லா காரியமும் மனிதனுடைய உபதேசமாய் இதிலே புகுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மன்னிப்பு கிடைக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய உண்மையான திட்டம். அந்த விதமாகத்தான் தேவன் கிரியை செய்கிறார். அது சரியே. 47அந்த நாட்களில் அவர்கள் பின்பற்றி வந்த பாரம்பரியத்தைக் கண்டு, அந்த மகத்தான தீர்க்கதரிசி கதறினார். “உங்கள் பாரம்பரியங்கள் வல்லமையற்றது. அவைகள் எனக்கு முன்பாக துர்நாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதிலே உங்களுக்கு விசுவாசம் இல்லை” என்று சொன்னார். அந்த மக்கள் அவர்கள் கொடுத்த பலியிலே எந்த ஒரு விசுவாசமும் இல்லாமல் பலியைக் கொடுத்தார்கள். இப்பொழுது, நாம் நமக்குள்ளாகவே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளலாம். அது இன்றைக்கு இருக்கிற காரியத்தைப் போன்று இருக்கிறதல்லவா? இதை சொல்லுவதற்கு வெறுத்தாலும், உண்மையை எங்காவது நேர் முகமாய் சந்தித்தாக வேண்டும். எங்கேயோ ஏதோ காரியம் தவறாய் நடக்கின்றது. இந்த சபையின் நிலைமையானது இப்பொழுது இருக்க வேண்டிய நிலையிலிருந்து ஏன் லட்சோப மைல்கள் தொலைவில் இருக்கிறது? இயேசுவானவர் தன்னுடைய சபையானது ஆயத்தமாகும்படிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்.“அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணினாள்”. நமக்கு அந்த திறன் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கு இருக்கிறார். தேவன் இங்கு இருக்கிறார். வியாதியஸ்தரை சுகமாக்கின வல்லமையும் மற்றும் எல்லாவற்றையும் கிறிஸ்து செய்தது போன்ற, வல்லமையையுடைய திறனை நாம் பெற்றிருக்கிறோம். அதை பரிசுத்த ஆவியானவர் மூலமாய் செய்யப்பட்டதை நானே கண்டிருக்கிறேன். ஆகவே எல்லா திறனும் இங்கு இருக்கிறது. ஆனால் தேவனோ நாம் நம்முடைய மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், லூத்தரன், பிரஸ்பிடேரியன், எதுவாக இருந்தாலும் அதினுடைய பாரம்பரியத்திலிருந்து திரும்பி அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள் வந்து தேவனுடைய ஜீவிக்கின்ற சபையாக மாற வேண்டும் என்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறார். “தாகமாயிருக்கிறவன், ஜீவத்தண்ணீரை இலவசமாய் எடுத்துக் கொள்ளட்டும்.” அதை நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன். தேவன் தாமே அதை செய்யும்படிக்கு பரிசுத்த ஆவியை அனுப்பி இருக்கிறார். ஆனால் நாமோ நம்முடைய சடங்குகளினாலே உத்தமம் இல்லாமல் ஒரு பாரம்பரியமாக செய்கிறோம். செய்த பாவத்திற்கு மனம் வருந்தாமல், உத்தமம் இல்லாமல் அவரிடம் செல்கிறோம். 48நான் கலிபோர்னியாவில் இருக்கிற பிரசித்தி பெற்ற நம்முடைய சகோதரர்கள் நடத்தின பிரபலமான கூட்டத்தில் ஓர் இரவு இருந்தபோது இவ்விதமாக கவனித்தேன்.அந்த கூட்டத்தில் இளம் வாலிபர்கள் வருகிறதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாகவே அந்த சகோதரன் எடுத்த நிலையைக் கண்டு நான் மிகவும் மெச்சினேன். யாராயிருந்தாலும் அவரைப் பாராட்டுவார்கள். அவர் இந்தக் கடைசி காலத்தில் எடுத்த நிலையை பார்க்கக்கூடிய தருணம் உங்களுக்கு இருக்குமானால்; நீங்களும் அவரைப் பாராட்டுவீர்கள். அப்படியாக அந்த மக்கள் அங்கே தீர்மானத்தை எடுக்கும்படி பலிபீடத் தண்டையில் வந்துக் கொண்டிருந்தபோது; இந்தவிதமாக பெண்கள் சூவிங்கம்மை (மெல்லும் பசை) அசைபோட்டுக் கொண்டும், பையன்கள் ஒருவருக்கொருவர் அடித்து விளையாடிக் கொண்டும், மக்கள் சிரித்துக் கொண்டும் வந்ததை கவனித்தேன். பாவத்திற்கான வருத்தத்தோடு, நான் ஒரு பாவி என்று உணர்ந்தவர்களாய் தேவனிடத்திற்கு வரவேண்டும். தேவனே, பாவத்தின் வேரண்டைக்குச் சென்று புருஷர்களும் ஸ்திரீகளும் தங்களின் பாவ நிலையை உணரக்கூடிய பண்டையக் கால பெந்தெகொஸ்தேயின் பரிசுத்த ஆவியின் எழுப்புதலை அனுப்பும். ஏதோ என்னுடைய சபைக்குச் சென்று என்னுடைய ஐக்கியத்தை புதுபித்து கொள்ளுவேன். “என்னுடைய அங்கத்தினர் அட்டையில் கையெழுத்திடுவேன்” என்று சொல்லுவது அல்ல. அதெல்லாம் சரிதான். ஆனால் அதே பலனை மேசன்கள் அல்லது வினோதமான கூட்டத்தாரிலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தேவன் மன்னிப்பின் பரிகாரமாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தண்டை வரும்போது அங்கே முழு உத்தமத்தோடும் வர வேண்டும். தேவன் உத்தமத்தைக் கோருகிறார். அவர் தன்னுடைய ஒரே பேரான குமாரனைக் கொடுத்து அப்பேர்ப்பட்ட மகத்தான கிரயத்தை கொடுப்பாரானால், நாம் அதை ஒரு கேளிக்கைக் காரியமாக ஒன்று சேர்ந்துகொண்டு ஓர் தீர்மான அட்டையை நிரப்பிவிட்டு எப்படிப் பெறமுடியம்? அது தேவனுடைய கோரிக்கைஅல்ல. “அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துக் கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்”. நமக்கு அரிகளைச்சுமந்து கொண்டு வருகிறவர்கள் தேவை. 49ஒரு விசை ஒரு பெரிய சுவிசேஷகருடைய காலையுணவு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசினதைக் கேட்டேன். அவரை எப்பொழுதுமே நான் மெச்சினதுண்டு. அவர் தன்னுடைய வேதாகமத்தை எடுத்து இப்படியாய் “இதோ இது தான் தரம். தேவன் இதைத் தான் கோருகிறார்” என்று சொன்னார். அதாவது “நான் ஒரு பட்டணத்திற்கு சென்று அங்கே ஒரு எழுப்புதலை நடத்தி, இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பேரை தீர்மானம் எடுக்கும்படி செய்வேன். பிறகு நான்கு அல்லது ஐந்து அல்லது ஒரு வேளை இரண்டு வருடங்கள் கழித்து வந்து பார்க்கும் போது, ”என்னால் பதினைந்து அல்லது இருபது நபரைக் கூட காண முடியவில்லை“ என்றார். தொடர்ந்து ”பரிசுத்த பவுல் பட்டணத்திற்குள்ளாகச் சென்று, ஒருவரை மனந்திரும்பச் செய்வார் என்றால், அடுத்த வருடம் அவர் வரும் போது; அந்த ஒரு நபர் மூலமாக அவர் முப்பது அல்லது நாற்பது பேரைப் பெற்றிருப்பார். ஆனால் இங்கே இப்படி நடந்தது இந்த சோம்பேறி பிரசங்கிமார்களாலேயே ஆனது. அவர்கள் தங்கள் கால்களை மேஜையின் மேல் வைத்துக் கொண்டு வெளியிலே சென்று மக்களை சந்திக்காததே அதற்கு காரணம் என்றார்“. 50அவர் தன்னுடைய சகோதரர்களைக் குறித்து தைரியமாய் தாக்கிப் பேசினதையும், மற்றும் அவருடைய வேதனையையும் நான் மெச்சுகிறேன். ஆனால் நான் அவரை இந்தக் கேள்வி ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்: “பவுலின் கீழாக மனம்மாறினவன் போகக் கூடியபடி எந்த சபையும் அங்கு இல்லாதபோது, அவனிடத்தில் எந்தப் பிரசங்கி பேசினான்? அப்படிஅவன் செயல்படக் காரணம் என்ன? பவுல் அவனுடைய சம்பிரதாயங்களிலிருந்தும், அல்லது அங்கத்தினர் அட்டையில் கையெழுத்து போடுவதிலிருந்தும் பிரித்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்குள்ளாக வழிநடத்தினான். அப்பொழுது அவனுடைய ஆத்துமா அவ்வளவாய் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் சென்று சாட்சி கொடுத்து நடந்த காரியங்களைச் சொல்கிறான். அவனுக்குள்ளாக தேவன் வைத்த அக்கினியினாலே அவனுடைய முழு ஆத்துமாவையும் பற்றி எரியும்படி செய்தது. இன்று நமக்கு தேவை என்னவென்றால்; ஒரு புருஷன் அல்லது ஸ்திரீ இரட்சிக்கப்பட்டதற்கான இந்த அடையாளமே தேவை. அவர்களை கவனித்துப் பாருங்கள், அவர்களால் முடிந்தவரை துரிதமாக ஆத்துமாக்களைப் பிடிக்கும்படி செல்வார்கள். 51ஒரு விசை அந்த மது சேவகரிடம் ஒரு சிறு பையன் உள்ளே வந்து “திருவாளர். மது சேவகர் அவர்களே?” என்றான். அதற்கு அவர். “என்ன மகனே” என்றார். அதற்கு அவன், “உங்களுடைய விளம்பரப் பலகை கீழே விழுந்து கிடக்கிறது” என்றான். அதற்கு அவர், “சரி மகனே, நன்றி” என்று சொல்லி வெளியே சென்றார். அப்பொழுது இந்த சிறுவன் தன்னுடைய கைகளை பின்னாக வைத்துக் கொண்டு அந்த மது சேவகரை நோக்கி கவனித்துக் கொண்டிருந்தான். அங்கே அந்த பெரிய பித்தளை தகட்டினால் ஆன விளம்பரப் பலகையானது மது அருந்துகிற அரையிலே போடப்பட்டிருந்தது. மது சேவகர் தன்னுடைய ஆடையின் மேல் அணிந்திருந்த துணியைக் கழற்றி அந்தப் பலகையை பளபளவென துடைத்து, “மகனே, நீ தவறாய்ச் சொன்னாய், என்னுடைய அடையாளம் சரியாய் இருக்கிறது”, என்றார். அதற்கு அவன், “இல்லை ஐயா, அதல்ல காரியம்”. 'நான் உங்களுடைய மிகச் சிறந்த அடையாளத்தைக் குறித்துச் சொல்லுகிறேன்“ என்றான். அதற்கு அவர், “இது நான் நான் பெற்றதிலே என்னுடைய மிகச் சிறந்த அடையாளம்” என்றார். அதற்குஅவன், “அது அல்ல. அதோ அங்கே விழுந்து கிடக்கிறதைப் பாருங்கள்” என்றான். அங்கே ஒரு சாக்கடையில் ஒரு குடிகாரன் விழுந்திருந்தான். ஆம் ஐயா, உள்ளே விற்கப்படும் பொருளானது ஒரு மனிதன் மீது செலுத்தும் செல்வாக்கே அப்பொருளின் மிகச்சிறந்த அடையாளமாய் இருக்கிறது என்று கண்டான். அப்படியாக நாம் ஒரு மனிதன் பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் கீழாக இருந்து அவனுடைய ஜீவியம் பண்டைய கால பெந்தெகொஸ்தே அக்கினியினால் கொழுந்து விட்டிருக்கும் என்றால், அதுவே அந்த மனிதன் இரட்சிக்கப்பட்டான் என்பதற்கான மிகச் சிறந்த அடையாளமாய் தேவன் வைத்திருக்கிறார். ஆம் ஐயா. அதுவே மிகச் சிறந்த அடையாளம். இப்பொழுது இது எப்படி நடக்கும்? ஒரு சபையில் சேர்ந்து கொள்வதினால் அல்ல, ஆனால் உங்களுக்குப் பதிலாக பாவமில்லாத இயேசு கிறிஸ்துவின் மூலமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக் கொள்வதினால் மாத்திரமே அதைப் பெற்றுக் கொள்கிறோம். 52எந்த ஒரு உத்தமமும் இல்லாமல், பாவத்திற்கு வருத்தமில்லாமல் இருப்போமானால் அவர் தன்னுடைய முகத்தை சடங்குகளிலிருந்து மறைத்துக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். அவர்களுடைய ஜெபங்கள் வல்லமையற்றவைகளானது. அவர்கள் நிச்சயமாகவே ஜெபித்தார்கள். அங்கே சென்று ஜெபங்களை ஏறெடுத்தார்கள். பலியை செலுத்தினார்கள். அது ஒரு வழக்கமாய் மாறிப்போனது. தீமோத்தேயு: 3-ம் வசனம் (அல்லது) 3-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி, அதே காரியத்தை இந்த கடைசி காலத்திலும் பெற்றிருப்போம் என்று உங்களுக்கு தெரியுமா? வேதமானது, “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்; இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்”. இப்பொழுதும் சபையானது அதே சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் செல்லும் நேரமானது வரும் என்று முன் உரைத்தது போன்று இதோ மீண்டும் வந்திருக்கிறது. ஒரு சம்பிரதாயமான வல்லமையற்ற மார்க்கம். 53ஓ‚ அவர்கள் அதை, 'கம்யூனிஸ்ட் காரர்கள்' என்கின்றனர். ஆனால் அது அவர்களைக் குறித்துச் சொல்லவில்லை. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறது. அப்படியானால் அவர்கள் சபைக்கு செல்லுவார்கள். ஏதாவது சபையோடு சேர்ந்து கொண்டிருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் சபைக்கு போகிறவர்கள் என்று பெரிய வேஷமிட்டுமற்றவர்களுக்குக் காண்பித்து வெளியிலே வேறு விதமான ஜீவியத்தை ஜீவிப்பார்கள். அவர்களுடைய ஆத்துமாவிலே அக்கினி இல்லை. அங்கு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு யாரைக் குறித்தும் கவலை இல்லை. “நாங்கள் இரட்சிக்கப்பட்டதாக உணருகிறோம்; மற்றவர்கள் போகட்டும். எவராகிலும் விரும்புவார்களானால் அவர்கள் மரித்துப் போகட்டும் என்று சொல்லுவார்கள். அது உண்மையான கிறிஸ்தவம் இல்லை. கிறிஸ்தவம் என்பது இழக்கப்பட்ட சகோதரனை தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு அதைக் குறித்து ஏதாவது செய்ய வேண்டும். நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று சொல்லிக்கொண்டு நம்முடைய கையைக்கட்டிக் கொண்டு ஒவ்வொரு நேரமும் மரித்துக் கொண்டிருக்கிற புருஷனையும் ஸ்திரீயையும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? தெருக்கள் முழுவதும் ஸ்திரீகள் சபைக்கு அரை காற்சட்டையை போட்டுக் கொண்டும், சாயம் பூசின முகத்தோடும், கையில் சிகரெட்டுகளைப் பிடித்து தெருவில் முன்னும் பின்னும் முகம் முழுவதும் சாயம் பூசி பார்ப்பதற்கு நரிஅல்லது ஓநாய்கள் போன்று இருந்து மற்றும் புருஷர்களும் அது போன்று மேலும் கீழுமாக சென்று சபையில் சேர்ந்து விடுகிறதைக் கண்டு அதை கிறிஸ்தவம் என்று அழைத்துக்கொண்டு, நீங்கள் மௌனமாய் இருக்க முடியுமா? 54பரிசுத்த பவுல் டூசானுக்குள் நடந்து வந்திருப்பாரானால் என்ன செய்திருப்பார்? நான் நினைக்கிறேன் விடியற்காலம் வரும் முன்னே அவரை சிறைசாலையில் போட்டிருப்பார்கள். அது சரியே. ஏன் தெரியுமா? அவருடைய ஆத்துமா அவர் நிறுத்தக் கூடாத அளவுக்கு தேவனுக்காய் கொழுந்து விட்டு எரியும். அது நிச்சயம். ஆனால் நாமோ சபையிலே சேர்ந்துக்கொள்ளுகிறோம். பார்த்தீர்களா, பாரம்பரியமானது தேவனுடைய பார்வையில் துர்நாற்றமாய் இருக்கிறது. இன்று நமக்கு தேவையானது என்னவென்றால் 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதுடன் வந்து, “நீங்கள் துர்நாற்றமானீர்கள்” என்று கூறி எல்லாவற்றையும் கிழித்துப்போடும் தீர்க்கதரிசி காட்சியில் எழும்ப வேண்டியதாய் இருக்கிறது. நம்முடைய ஸ்தாபனங்களெல்லாம் வளர்ந்துவிட்டன. சபைகள் வளர்ந்து விட்டன, அவர்கள் நேற்று இருந்ததை காட்டிலும் இன்று சற்று நன்றாய் இருக்கிறார்கள். ஆனால் நாமோ இந்த அருமையான நாற்காலிகளில் உட்கார்ந்து மரிப்பதைக் காட்டிலும், சந்துகளில் நின்று. கிட்டார் வாத்தியம் போட்டு பாடல்களை இயக்கி மேளம் அடித்து நம்முடைய ஆத்துமாக்களில் உண்மையான பெந்தெகொஸ்தே அக்கினியானது கொழுந்துவிட்டு எரிவதையே மேன்மையாகக் கருதுகிறேன். உலகமானது நம் கால்களுக்கடியில் மரித்துக் கொண்டிருக்கிறது. ஆம், ஐயா, 55ஆம் ஐயா, தேவன் ஒரு மன்னிப்பை வைத்திருக்கிறார். அந்த மன்னிப்பானது இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரம் கிடைக்கும். கல்வி, பாரம்பரியம், ஸ்தாபனம், விஞ்ஞானம், எதுவுமே அந்த இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. மன்னிப்பானது எப்பொழுதுமே இரத்தத்தின் கீழாகத் தான் இருக்கும். பாரம்பரியத்தினால் அல்ல. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மாத்திரம் இருக்கும். நாம் எப்பொழுதும் சந்திக்க கூடிய ஒரே இடம் அது மாத்திரமே. அதுவே பாவிகளுக்கு தேவனால் அருளப்பட்ட வழி. நான் இப்படியாய் சொல்லட்டும். ஒரு மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தெகொஸ்தேயினர் ஒவ்வொருவரும் அந்த இரத்தத்திற்குள்ளாக வரும் பட்சத்தில் எல்லோரும் சகோதரர்களாக இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவரிடையே சச்சரவு இருக்காது. இல்லை ஐயா, அவர்கள் சகோதரர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரி பார்ப்பார்கள். மெதோடிஸ்டுகள் பாப்டிஸ்ட்டின் ஞானஸ்நான முறைமையைக் குறித்து பேசுவதை கவனித்துப் பார்ப்பீர்களானால்; மற்றும் ஒருத்துவர்கள் திருத்துவத்தைக் குறித்தும், திருத்துவக்காரர்கள் ஒருத்துவத்தைக் குறித்தும் பேசும் போது அவர்களுடைய முடி சிலிர்த்துக் கொள்வதையும் காண்பீர்கள். ஆனால் அவர்கள் தாமே சிலுவையண்டையில் வருவார்களானால் பிறகு என்ன நடக்கிறதென்று பாருங்கள். '....அது நான் மரிக்கும் மட்டும் அப்படியாய் இருக்கும். இந்த அற்பமான மழலைப்பேச்சும், திக்குநாவும் கல்லறையில் அமைதியாய் இருக்கும்போது என்னை இரட்சிக்கக் கூடிய, வல்லமையுள்ள, பண்புள்ள, இனிமையான பாடலைப் பாடிடுவேன். 56இன்றிரவு, ஒருவர் ஒரு மெதோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, லூத்தரனாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ யாராக இருந்தாலும் சரி அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் என்னுடைய சகோதரனாய் இருக்கிறார் என்று நான் உங்கள் மத்தியில் சாட்சி கொடுக்கிறேன். ஆம் ஐயா, அந்த நபருக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. அவனுக்குள்ளாக இருக்கிற ஆவி அவனை சகோதரனாக்கிவிடுகிறது. அப்படி இருக்கும்போது அவன் தர்க்கிக்கிறவனாகவோ அல்லது அது போன்று இருப்பவனாகவோ இருக்கமாட்டான். அவன் கிறிஸ்துவுக்குள் சகோதரனாக இருப்பான். வேதத்தில் இருக்கும் எல்லா வார்த்தையையும் அவன் விசுவாசிப்பான். வேதாகமத்தை எழுதின பரிசுத்த ஆவியானவர் தாமே அதை எப்படி மறுதலிப்பார்? பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்குள்ளாக ஜீவிக்கும் பட்சத்தில் “அது நமக்கு அல்ல, அது சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டது” என்றுஎப்படிச் சொல்ல முடியும்? “விரும்புகிற யாவருக்கும்” என்று இயேசு சொன்னார். பேதுரு. “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று சொன்னார். தேவன் யாரையெல்லாம் அழைக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார். இங்கே அவர், “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை முன்னறிந்துமிருக்கிறார்”.அவர் முதலாவது அவர்களை நியமித்தார். பின் அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். “பிதாவானவர் ஒருவரை அழைக்காவிட்டால் யாரும் என்னிடத்தில் வர முடியாது. பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று இயேசு கூறினார். 57நாம் ஏதோ ஒரு உணர்ச்சிவசப்பட்டதினால் வருகிறோமா? அல்லது ஏதோ சபையில் சேர்ந்து அங்கத்தினர்களாகும்படி வருகிறோமா? அல்லது பாதாளத்திற்கு செல்லக் கூடாது என்பதினால் இங்கு வருகிறோமா? அல்லது “தேவன் தன்னுடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்பதினால்” அவரை நேசித்து வருகிறோமா? அல்லது தேவன் நமக்கு கொடுத்த அன்பின் பலியை காண்பிக்கும்படி வருகிறோமா? தேவன் வல்லமையற்ற மார்க்கத்தை வெறுக்கிறார். அவர்களுடைய மார்க்கத்தில் வல்லமையில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் இந்த நாளிலே அவர் என்ன செய்யவேண்டும்? வேதத்தின் இப்பக்கத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் எழுப்புதல் கொண்டு வந்தபோது அது அடையாளங்களினாலும் வல்லமையினாலும் ஆதரிக்கப்பட்டிருந்தது. லூத்தர் வந்தபோதும், வெஸ்லி வந்தபோதும், மற்றும் எல்லா சீர்திருத்தவாதிகள் - சேன்கி, பின்னி, நாக்ஸ், கேல்வின்,மற்றும் யாராக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் வந்தபோது அங்கே வல்லமையானது பிரத்தியட்சயமானது.தேவன் இயற்கைக்கு மேம்பட்டவராய் இருக்கிறதினால் அவர் எங்கு எல்லாம் தன்னை வெளிப்படுத்துகிறாரோ அங்கு எல்லாம் இயற்கைக்கு மேம்பட்ட காரியம் நடந்தாக வேண்டும். 58அந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்த பரிசேயர்களைப் பாருங்கள். அவர்கள் “எங்களுடைய ஆசாரியனைக் காட்டிலும் யார் இனிமையாய் இருக்கமுடியும்? என்று சொல்லி தங்களுடைய ஆசாரியனுடைய எளிமையையும் இனிமையையும் குறித்துப் பேசினார்கள். ”எங்களுடைய ஆசாரியனைக் காட்டிலும் உயர்ந்தவன் யார்? நீங்கள் பிறந்த போது உங்களைச் சந்திக்கும்படி உங்களிடத்தில் வருகிறார். உங்களுடைய அண்டை வீட்டாரோடு சச்சரவு இருக்கும் போதும் அவர் வந்து அதைத் தீர்த்து வைக்கிறார். அவர் எப்பொழுதும் சமாதானத்தை உண்டு பண்ணுகிறவராகவே இருக்கிறார். அவர் ஒரு அன்பான மனிதன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் தொல்லைக்குள்ளாகும் போது, அவரிடம் போவீர்கள் என்றால் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.இப்படிப்பட்ட அருமையான நபரைக் குறித்து என்ன“? என்றார்கள். அதன் பிறகு இந்த நசரேயனாகிய இயேசுவைக் குறித்துப் பேசும்போது, “நம்முடைய ஆசாரியனுடைய தகப்பனார் யார் என்றும், அவருடைய வம்சம் என்னவென்றும் நாம் அறிந்திருக்கிறோம். மற்றும் அவர் எந்தப் பள்ளியில் பயின்றார் என்ற அத்தாட்சியும் இருக்கிறது. ஆனால் யார் இந்த நசரேயனாகிய இயேசு? அவர் எந்தப் பள்ளியல் படித்தார்? அவர் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்? அவர் ஏன் எப்பொழுதும் குறை கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை? நம்முடைய முதிர்ந்த கனவானான ஆசாரியனைக் குறித்து “நீ பிசாசினால் உண்டானவன்; நீ உன் பிதாவாகிய பிசாசினால் உண்டானவன்; அவன் செய்த கிரியையை நீயும் செய்வாய்” என்று எப்படியாய்ச் சொல்லுகிறார் பாருங்கள்? உங்களால் இவைகளை நினைத்துப் பார்க்க முடிகிறதா? அவர் அந்த தேவாலயத்திற்குச் சென்று ஜனங்களைக் கோபமாகப் பார்த்து, யெகோவா கோரின பலிகளையெல்லாம் எட்டி உதைத்து, உரக்க சத்தமாய், “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்றார். இப்பொழுது அவர் இங்கு இருக்கிற நம்முடைய நவீன கால சபைக்கு வருவாரானால் என்ன செய்வார்? இன்னும் சில மேஜைகள் பறக்கும்‚ சில நாற்காலிகள் வீசப்படும்‚ அவர் அதைக் கிழித்துப் போடுவார். அது சரியே. இன்னும் அதே காரியம் தான் இங்கும் நடக்கும். இயேசுவானவர் வேதப்பூர்வமாக இருக்கிறதை உங்களால் காண முடியவில்லையா. அவரே அந்த வார்த்தை. அவர் எதுவும் எழுதவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவரே வார்த்தையாக இருக்கிறார். அவரே ஜீவிக்கின்ற வார்த்தை. ஆனால் மக்களோ அதை இனங்கண்டுகொள்ளத் தவறுகிறார்கள் 59இயேசுவானவர் “இந்த அடையாளங்கள் பின்தொடரும்,” என்று இந்த ஆசீர்வாதங்களை முழு உலகத்திற்கும் வாக்குத்தத்தம் பண்ணியிருக்க; மற்றும் அவர் அழைக்கிற யாவருக்கும் அன்று பரிசுத்த ஆவியானவர் எப்படி இறங்கினாரோ அந்தப்படியே திட்டவட்டமாக நிறைவேற்ற எப்படி ஒரு மனிதன் தான் கிறிஸ்தவன் என்று சொல்லி, பரிசுத்த ஆவி எனக்குள் இருக்கிறார் என்று சொல்லி, அவருடைய வார்த்தையை மறுதலிக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் 'ஆமென்' என்று ஆமோதிப்பார். அது நிச்சயமாக சரி தான். ஓ, என் சகோதரனே‚ நம்முடைய கல்வி அமைப்பானது நம்மை அதிலிருந்து அதிக தூரம் கொண்டு போய்விட்டது. நம்முடைய ஸ்தாபனங்கள் நம்மை கிறிஸ்துவிலிருந்தும்; ஒருவரிலிருந்து ஒருவரையும் பிரித்துப் போட்டது. இருப்பினும் அவர்கள் அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். நீங்களும் கொடுக்கப்பட்ட பதிலிக்குப் பதிலாக வேறொன்றை எடுப்பீர்கள் என்றால், அது மீண்டும் ஒரு அத்தி இலையைத் தவிர வேறொன்றும் இல்லை. தேவன் அதை நிராகரிக்கிறார். ஆனால் சபையானது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழாக வந்து, பரிசுத்த ஆவியின் அடையாளம் அவர்கள் மேல் இருக்குமானால், அப்பொழுது நீங்கள் சகோதரத்துவத்தை மறுபடியும் காண்பீர்கள். நீங்கள் வல்லமையினால் நிறைந்த சபையைப் பார்ப்பீர்கள். நிச்சயமாக பார்ப்பீர்கள். 60தேவன் வல்லமையற்ற மார்க்கத்தை வெறுக்கிறார். அதிலே வல்லமை இருக்க வேண்டும்‚ நிச்சயமாகவே இருக்கவேண்டும். அது மனிதனைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும் வல்லமையாக இருக்கவேண்டும். அது இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் பண்ணின அற்புதங்களையும் அதிசயங்களையும் அடையாளங்களையும் நிறைவேற்றுகிற வல்லமையாக இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மேலாக, சரியாகக் குறிவைத்து விசுவாசித்தபோது அதினுடைய இலக்கை அவர்கள் அடைந்தார்கள். நீங்களும் அதே விதமாக தேவனுடைய வார்த்தையின் மேலாக குறிவையுங்கள். அப்பொழுது அது மறுபடியுமாக அதினுடைய இலக்கை அடையும். அது அப்படியே நடந்தேறும். ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். தேவனுக்கு வல்லமையற்ற மார்க்கத்தின் மேல் விருப்பம் இல்லை. தேவனுக்கு அது தேவையில்லை. தேவன் காரியங்களைச் செய்ய விரும்புகிறார். அவர் தாம் ஜீவிக்கிறார் என்பதைக் காட்ட விரும்புகிறார். நம்முடைய நம்பிக்கையெல்லாம் உயிர்த்தெழுதலாக இருக்கிறது. அது சரிதானே? நம்முடைய ஜீவியத்தின் நம்பிக்கை உயிர்த்தெழுதலே‚ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே நம்முடைய நம்பிக்கை. 61பாருங்கள், தேவன் தாமே தன்னுடைய சபையில் கிரியை செய்ய விரும்புகிறார். “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூடஇருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு சொன்னார். மற்றும் யோவான் 14:12 “நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்; ஏனென்றால் நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறேன்.” இப்பொழுதோ சபையானது அதை மறுக்க முயற்சிப்பதன் மூலம் அதிகமான உறுப்பினர்களைப் பெறவும் அதிகமாகப் பேர் பிரஸ்தாபத்தைப் பெறவும் வழியுண்டாக்குகிறது. நான் இப்பொழுது உங்களை ஒன்று கேட்கட்டும். தேவன் தன்னுடைய சபையில் கிரியை செய்ய விரும்புகிறார். ஆனால் சபையோ தங்களுடைய கோட்பாடுகளினாலே கிரியை செய்ய விரும்புகிறது. மற்றும் இரண்டுமே ஒரே சமயத்தில் கிரியை செய்ய முடியாது. நீங்கள் கோட்பாடுகளிலிருந்து விலகி கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கவேண்டும். இதை நீங்கள் எப்படிச் செய்ய முடியும்? உத்தம இருதயத்தோடு அந்த இரத்தத்தைப் பூசி, இயேசு கிறிஸ்துவின் மேலாய்க் கரத்தை வைத்து தேவனுக்கு முன்பாக உண்மையான இருதயத்தோடு தன்னுடைய தவறுகளை அறிக்கைசெய்து பரிசுத்த ஆவியினால் பிறக்கும்போது, அவர் இரத்தத்தைப் பார்க்கும்போது அவர் சொன்ன பிரகாரமாக அவருடைய கிரியைகள் அவனைப் பின்தொடரும். ஆம், சபையானது அங்கத்தினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்படியாய் அவர்களுடைய கோட்பாடுகள் மூலமாய்க் கிரியை செய்ய விரும்புகிறது. ஆனால் தேவனோ இரத்தத்தின் வல்லமையினாலே கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறக்கும்படியாய் கிரியை செய்ய விரும்புகிறார். அது தான் வித்தியாசம். நீ ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால் பரிசுத்த ஆவியையும் அவருடைய வல்லமையுள்ள கிரியையையும் நிராகரிக்க வேண்டும். நீ ஒன்றைப்பெற்றுக் கொள்ள மற்றொன்றை நிராகரிக்க வேண்டும். நீ கிறிஸ்தவனாக இருக்க விரும்பினால்; ஒரு பிழையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக சத்தியத்தைப் பார்க்க வேண்டும். நீ அதைக் கடந்து போக முடியாது. ஒரு பிழையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக தேவனுடைய வாக்குத்தத்தங்களைத் தள்ளிப் போடவேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் சிவப்பு விளக்கானது எப்பொழுதுமே “இது அவருடைய வார்த்தை” என்று பளிச்சிட்டுக் கொண்டிருக்கும். 62நீங்கள், “அது வேறு ஒரு நாளுக்குரியது” என்று சொல்லலாம். ஆனால் அது இந்த நாளுக்குரியதே. ஏனென்றால் கிறிஸ்துவே வார்த்தையாய் இருக்கிறார். அதுசரிதானே? (சபையோர் ஆமென் என்கின்றனர்) யோவான் 1-ம் அதிகாரத்தில்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. இன்னும் வேதமானது, “அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார்” என்று சொல்லுகிறது. ஆகவே கிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார் என்றால், ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உண்மையானதாகும். ஏனென்றால் அது நேற்றும், இன்றும், என்றும், மாறாததுமாயிருக்கிறது. அது அப்படித் தான் இருந்தாக வேண்டும். இதை நம்புவதற்கும் செயல்படுத்துவதற்கும் மறுபடியும் பிறத்தலின் விசுவாசம் தேவையாய் இருக்கிறது. நீங்கள் அதை வெறும் உங்களுடைய பாரம்பரியங்களினால் செய்ய முடியாது. அந்தவிதமாக அது கிரியை செய்யாது. அந்த இரத்தத்தண்டையில் மிக நிச்சயத்தோடு வரவேண்டும். 63ஏசாயா இஸ்ரவேலர்களிடத்தில் நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே உங்களுக்காகக் கொடுக்கப்பட்ட பதிலியை மாசுபடுத்தினீர்கள் என்று உரைத்த பிறகு அங்கே வேறொரு தீர்க்கதரிசி தோன்றினார். (நான் முடிக்கிறதற்கு முன்பாக இதைச் சொல்லட்டும்). இன்னொரு மகத்தான தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானகன் காட்சியிலே எழும்பினான். அவன் இஸ்ரவேலர்களை மாத்திரம் ஆட்டுக்குட்டியானவர் இடத்தில் வழிநடத்தவில்லை; விழுந்துபோன ஆதாமினுடைய இனத்தார் யாவருக்கும் ஆட்டுக் குட்டியானவரைச் சுட்டிக் காண்பித்தான். அவன் தேவன் ஒரு ஆட்டுக் குட்டியை அனுப்பப் போகிறார்; இந்த ஆட்டுக்குட்டியானது புறஜாதியாருக்கும், யூதனுக்கும் மற்றும் அவரிடத்தில் வருகிற யாவருக்கும் உண்டு என்றான். அவன் சொல்லி அதிக நாட்கள் இல்லை, அந்த ஆட்டுக்குட்டியானது பலிபீடத்தின் சிலுவையிலே அடிக்கப்பட்டு அவருடைய இரத்தமானது சிந்தப்பட்டது. அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் திரும்ப வந்தார். இப்பொழுது அந்த பழமையான விலங்காகிய ஆட்டுக்குட்டியானது மரித்த போது, அந்த விலங்கினுடைய ஆவியானது மனிதன் மேல் திரும்ப வரமுடியாது. ஆனாலும் அந்த இரத்தமானது தேசமெங்கிலும் பூசப்பட்டிருந்தது. இப்பொழுதோ சிந்தப்பட்ட ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தமானது ஆதாமினுடைய இனத்தார் யாவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதினுடைய அடையாளமாய் அது பரிசுத்த ஆவியின் ரூபத்திலே பலி செலுத்துகிறவர்கள் மேல் வந்திருக்கிறது. அதைத்தான் தேவன் கோருகின்றார். அந்நாளிலும் அதைத்தான் செய்தார்கள். இந்நாளிலும் அதைத் தான் செய்ய வேண்டும். இப்பொழுது இங்கே யாராவது பாவத்தினால் பாரப்பட்டு, தவறு செய்தீர்கள் என்ற உணர்விற்குள் வருவீர்களானால்; கவனியுங்கள், இங்கே மன்னிப்பு இருக்கிறது. அந்த மன்னிப்பானது தேவ ஆட்டுக்குட்டியானவர் மூலமாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ஆமென் என்கின்றனர்) அது ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தின் மூலமாக வருகிறது. 64ஒரு விசை என்னிடம் ஒரு கதை சொல்லப்பட்டிருந்தது. அது எனக்கு மிகவும் உதவியாயிருந்தது. ஒருவன் தன்னுடைய சிறு வயதிலே கடத்தப்பட்டிருந்தான். நான் நினைக்கிறேன் நீங்கள் எல்லோரும் வேதாகம வரலாற்றையும் மற்றும் சபை வரலாற்றையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது பாக்ஸே என்று... அல்ல அது அவர் அல்ல. அது நிசியா பிதா அல்லது செயின்ட் பேட்ரிக்கினுடைய வாழ்க்கை என்று நினைக்கிறேன். செயின்ட் பேட்ரிக் அவர்களுக்குச் சொல்லப்போனால் அவருக்கு இந்த பெயர் உண்மையான பெயர் அல்ல. அவருடைய உண்மையான பெயர் சுஸ்காட். அவர் ஒரு கூட்டகடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு; காட்டுபன்றி வளர்க்கிறவனிடத்தில் விற்றுப் போட்டார்கள். மற்றும் இந்தக் கதை இந்த விதமாகச் சொல்லப்பட்டது. அந்தச் சிறுவன் கடத்தப்பட்டு கப்பலிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கிருந்த வயதான கப்பல் கேப்டன் ஒரு நாளில் வியாதிப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்தார். நரைத்துப் போன தாடியோடு இருந்த அந்தக் கப்பல் கேப்டன் நடுக்கடலிலே மிகவும் வியாதிப்பட்டவராயத்; தன்னுடைய அறையில் கிடந்தார். அவர் தன்னுடைய உதவிக்காரர்களை அழைத்து, “உங்களிடத்தில் வேதாகமம் இருக்கிறதா?. ஏனென்றால் நான் சிறு வயதாக இருந்தபோது, ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். இப்பொழுதோ நான் மரிக்கும் இந்த நேரத்தில் இவ்விதமாக மரிக்க விரும்பவில்லை. நீ தேவனுடைய வேதாகமத்தை பெற்றிருக்கிறாயா? இங்கிருக்கிற யாராவது தேவனுடைய வேதாகமத்தை பெற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார். 65கடைசியாக, கூட்டத்தில் இருந்த ஒரு சிறு பையன் எழும்பி, “ஐயா, நான் வேதாகமத்தைப் பெற்றிருக்கிறேன். நான் எப்பொழுதுமே வேதாகமத்தை என்னோடு எடுத்துச் செல்லுவேன். நான் ஒரு கிறிஸ்தவன்” என்றான். அதற்குக் கப்பல் கேப்டன், “இங்கே வா மகனே. நீ எப்பொழுதும் வேதத்தை உன்னோடு சுமந்து செல்லுவாயா?.” என்றார். அவனோ, “ஆம், என்னுடைய தாயும் தகப்பனாரும் கிறிஸ்தவர்கள். மற்றும் என்னுடைய ஜீவியத்தை நான் சிறுவனாக இருந்தபோது கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தேன். அது முதற்கொண்டு நான் எங்கு சென்றாலும் அவருடைய வார்த்தையை எடுத்துச் செல்லுவேன், அதை என் இருதயத்திலே வைத்திருக்கிறேன்”, என்றான். அதற்கு அவர், “மகனே, நான் மரிப்பதற்கு முன்பாக அதிலிருந்து ஏதாவதொன்றை எனக்கு வாசி”, என்றார். அந்தச் சிறிய பையன் ஏசாயா: 53:5-ஐ எடுத்து இப்படியாய் வாசித்தான்: “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”. அதை வாசித்த பிறகு, அந்த வயதான கப்பல் கேப்டன், “தொடர்ந்து வாசிப்பாயா?” என்றார். அதற்கு அந்தச் சிறு பையன், “நான் ஒரு காரியத்தைக் கூறலாமா”? என்றான். அதற்கு அந்த வயதான கப்பல் கேப்டன் சிறுவனிடத்தில்,“கூறு”, என்றார். அதற்கு அவன், “என்னுடைய கிறிஸ்தவத் தாய், நான் அவர்களிடமிருந்து கடத்தப்படுவதற்கு முன்பாக, இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தை அதிகமாய் வாசித்துக் காண்பித்திருக்கிறார்கள். மற்றும் அவர்கள் அதை எப்படி வாசித்தார்கள் என்று தெரியுமா?” என்றான் அதற்கு அந்த கப்பல் கேப்டன், “இல்லை மகனே கேட்டதில்லை, உன்னுடைய கிறிஸ்தவத் தாய் வாசித்ததைப் போல் வாசிக்கக் கேட்க விரும்புகிறேன்”, என்று சொன்னார். 66அதற்கு அவன், “இதோ இந்தவிதமாகக் தான் வாசித்தார்கள்: வில்லி ப்ருட்ஸ் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, வில்லிப்ருட்ஸ் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; வில்லி ப்ருட்ஸ்க்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் வில்லி ப்ருட்ஸ்குணமாகினான்“. அதற்கு அந்த வயதான கப்பலோட்டி, “நான் அதை நேசிக்கிறேன். நான் அதை நேசிக்கிறேன்”. ஓ‚ என்னுடைய பெயர் மாத்திரம் அதிலே பொருத்தப்பட்டு வாசிக்கப்படும் என்றால். மகனே, அதை உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா? என்றார். அதற்கு அவன, “நான் முயற்சி செய்கிறேன்”, என்று சொல்லி; “ஜான் குவார்ட்ஸ் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு; ஜான் குவார்ட்ஸ் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; ஜான் குவார்ட்ஸ்க்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் ஜான் குவார்ட்ஸ் குணமானார்”, என்றான். அவருடைய தாடியில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, “என்னுடைய ஆடைகளைக் கொடுங்கள். இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கினார். என்னுடைய ஜீவியத்தை அவருக்கு ஒப்புக் கொடுக்கிறேன்”, என்று சொன்னார். பாருங்கள்? 67ஓ, நண்பனே‚ நீ மாத்திரம் உன்னுடைய பெயரைப் போட்டு வாசிப்பாய் என்றால்; ஓ நான் என்னுடைய பெயரைப் போட்டு, “வில்லியம் பிரான்ஹாம் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு; வில்லியம் பிரான்ஹாம் அக்கிரமங்களினிமித்தம்... சபையினிமித்தம் அல்ல. கோட்பாடுகளினால் அல்ல. ஆனால் நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் வில்லியம் பிரான்ஹாம் குணமானார்”. ஓ நாம் மாத்திரம் நம்முடைய பெயரை அதிலே இணைத்து அதை உத்தமத்தோடு வாசிப்போம் என்றால், நிச்சயமாகவே அது தான் காரியம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு; நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் என்று நம்முடைய பெயரை அதிலே இணைத்து உணரும்போது; அவர் கொடுத்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகும். 68எபிரேயர் 9:11-ல் இன்னொரு காரியத்தைப் பார்க்கிறோம். அதாவது மன்னிப்பானது பரிசுத்தத்தை உண்டு பண்ணுகிறதினால் ஆராதிக்கிறவர் தன்னுடைய செத்த பாரம்பரியத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டவராய் பாவத்தின் குற்ற உணர்வு இல்லாத சிந்தைஉடையவராய் இருக்கிறார். உண்மையாகவே இரத்தத்தின் கீழாக வரும்போது செத்தப் பாரம்பரியங்களிலிருந்து நம்மை சுத்திகரிக்கும். வேதாகமத்தில், எபிரேயர் 9-ல் கவனியுங்கள்: “உங்கள் மனச்சாட்சியை செத்தப் பாரம்பரியங்களிலிருந்து சுத்திகரிப்பது...” நீங்கள் அதை செய்து அந்த இரத்தத்தின்கீழாக வரும்போது நீங்கள் ஒரு பாப்டிஸ்ட் என்பதையோ, மெத்தோடிஸ்ட் என்பதையோ அல்லது ஒரு பெந்தகொஸ்தே என்பதையோ; எதுவாய் இருந்தாலும் சரி, நீங்கள் அதை மறந்துவிடுங்கள். அந்த செத்த பாரம்பரியங்களை மறந்து இரத்தத்திற்குள்ளாக வாருங்கள். அதற்குள் வாருங்கள். உங்களுடைய பெயரை அதிலே இணைத்து வாசித்த பிறகு இராப்போஜனபந்திக்கு வந்து; யார் சரி என்றும் யார் தவறென்றும் கண்டறியுங்கள். அது மூடப்பட்ட இராபோஜனமா இல்லையோ; அப்படியாக வரும் பட்சத்தில் உங்களுடைய சகோதரனை வெளியே தள்ள முடியுமா என்று பாருங்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. உங்களால் அதைச் செய்யவே முடியாது. உங்களுக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று நீங்கள் அப்படிச் செய்யும்படி அனுமதிக்காது. ஏதோ ஒன்று இருக்கிறது பாருங்கள். உங்களுடைய பெயர் அந்த வசனத்தோடு வாசிக்கப்பட்டாயிற்று. ஆகையால், அப்படி உங்களால் செய்ய முடியாது. அது உங்களைப் பரிசுத்தப்படுத்தும். உங்களை சுத்திகரிக்கும். 69அது கத்தோலிக்க பாதிரியாராக இருந்தாலும் சரி, பிரஸ்பிடேரியனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, சிலுவையண்டையில் அவரை நினைவு கூர்ந்தவர்களாய் முழங்கால் படியிடவேண்டும். அந்த மனிதன் வந்து அவருடைய பெயரை அதிலே போட்டு இந்த விதமாய் வாசிக்கட்டும்; “இந்த ஆசாரியனுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு; மெத்தோடிஸ்ட் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு; இன்னும் பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு” என்ன அது? மீறுதல்களுக்காகக் காயப்பட்டார். “என்னுடைய பெயர், உங்களுடைய பெயர், யாராயிருந்தாலும் சரி, அதை விசுவாசிப்போம். கோட்பாடுகள் என்ன சொல்லுகிறதோ அதை அல்ல. வார்த்தை என்ன சொல்லுகிறதோ அதற்காக ஒருமித்து சிலுவையண்டையில் ஒன்றாய் முழங்கால் படியிடுவோம். நாம் அனைவரும் சகோதரர்கள். ஆம், அந்த பாரம்பரியங்களிலிருந்து, அந்த செத்த கிரியைகளிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட்டிருப்போம். அங்கே நாற்பது மாநில பிரஸ்பிடேரியர்கள் குழு இருக்கலாம்; நாற்பது பிரதான ஆசாரியர்கள் குழு இருக்கலாம்; கார்டினல்கள், பேராயர்கள் மற்றும் போப் இன்னும் அது போன்று இருக்கிறவர்கள் கூச்சலிட்டு, “அவர்களோடு சேர்ந்து உன்னை அசுசிப்படுத்தாதே” என்பார்கள். ஆனால், நீங்களோ உங்களுடைய சகோதரரோடு உங்கள் கரங்களைப் போட்டு அணைப்பீர்கள். அதில் உண்மையான காரியம் இருக்கிறது. நீங்கள் அவரிடம் எந்த விதமான மன்னிப்பை உங்கள் பாவ நிவர்த்திக்காகப் பெற்றிருக்கிறீர்களோ; அதே விதமாக அவரும் பெற்றிருக்கிறார். இப்பொழுது நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். அது இன்னும் ஒரு சகோதரனிடம் நெருங்கி இருக்கும்படி செய்யும். அப்பொழுது ஏதோ ஒரு காரியம் உங்களை இன்னும் தேவனிடத்தில் கிட்டிச் சேர்க்கிறதாய் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல், நீங்கள் தேவனிடத்தில் கிட்டிச் சேரும் போது, நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பீர்கள். “நீங்கள் காண்கிற சகோதரனை வெறுத்து அல்லது இகழ்ந்து, காணாத தேவனை நேசிக்கிறேன் என்று சொல்லுவதெப்படி? அப்படியென்றால் நீங்கள் ஒரு பொய்யன். உங்களிடத்தில் உண்மை இல்லை. ஆனால் நாம் மாத்திரம் நம்முடைய பாவங்களைக் கழுவுகிற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தண்டை வருவோமானால் நாம் எல்லோரும் சகோதரர்களாவோம். நமக்குள் எந்த வேற்றுமையும் இராது. நம்மேல் இருக்கிற சூட்டு குறியீடு (brand) எல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது. 70ஒரு விசை நான் அந்த கால்நடைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் இருந்த போது, ஒரு வாயிற் கதவைக் கடந்து வந்த சம்பவத்தை இங்கிருக்கிற ஒரு சகோதரனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த கால்நடைகள் வசந்த காலத்தன்று அதற்குள்ளாக மேய வரும் போது, அந்த காட்டிலாகா அதிகாரி அவைகளின் மேல் ஒரு அடையாளமான தீக்குறியீட்டைப் போடுவான். அப்படியே உள்ளே வருவதைக் கவனித்துக் கொண்டிருப்பான். அவைகளோ பல்வேறு வகையைச் சேர்ந்ததாய் இருக்கும். ஆனால் அவன் ஒரு போதும் அது எந்த வகையைச் சேர்ந்தது என்று பார்க்கமாட்டான். அவன் எப்பொழுதுமே அந்த குறியீட்டின் இரத்த அடையாளத்தையே பார்ப்பான். அது முழுமையாக “ஹியர்ஃபேர்டின்” கலப்படமில்லாத இரத்த இனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவைகள் அராபாஹோ காட்டிற்குள்ளாகப் போக “ஹியர்ஃகபேர்டின்” சங்கம் உள்ளே மேய அனுமதிக்காது. அது முற்றிலுமாக “ஹியர்ஃபேர்டின்” கலப்படமில்லாத இனமாக இருக்கவேண்டும். 71அந்த விதமாகத் தான் இந்தக் கடைசிக் காலத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன். அவர், “நீ மெதோடிஸ்டா? பாப்டிஸ்டா?” என்று கேட்கமாட்டார். அது தான் இன்றைக்கு இருக்கிற பெரிய கேள்வியாய் இருக்கிறது. “நீ எந்த வகையினரைச் சேர்ந்தவன்? நீ மெதோடிஸ்டா? பாப்டிஸ்டா? நான், “இல்லை” என்பேன். அப்படியென்றால், நீர் எந்தக் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்? நீர் ஒரு பிரஸ்பிடேரியனா? லூத்தரனா? நசரேயனா? பெந்தெகொஸ்தேயினரா? என்று கேட்பார்கள். நான், “இல்லை” என்பேன். “அப்படியென்றால், நீர் யார்? “நான் ஒரு கிறிஸ்தவன்”. ஒரு கிறிஸ்தவன் அந்த இரத்தத்திற்குள்ளாக, இரத்த அடையாளத்தோடு இருப்பான். அப்படியென்றால் அந்த இரத்தத்தின் கீழாக இருக்கும் ஒவ்வொரு சகோதரனும் சகோதரியும் என்னுடைய சகோதர சகோதரிகளாய் இருக்கிறார்கள். கிறிஸ்துவுக்கு முன்பாக மிக உத்தமத்தோடும் இருக்கவேண்டும். ஆசாரியர்களானாலும், பிரசங்கியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அந்த பலியின் மேலாக கையை வைத்து “ஓ தேவனே நாங்கள் குற்றப்படுத்தப்பட்ட பாவிகள் உம்முடைய இரக்கத்திற்கு நாங்கள் அருகதையற்றவர்கள். ஆனால் நீர் எங்களுக்காக நாங்கள் மரிப்பதற்குப் பதிலாக உம்முடைய குமாரனை அனுப்பினீர்.அதை நாங்கள் முழுவதுமாய் ஏற்றுக் கொள்ளுகிறோம்” என்று சொல்லவேண்டும். அப்படியானால் நாம் சகோதரர்களாக இருப்போம் 72எல்லா தர்க்கங்களும் போய்விட்டது எல்லாம் போய்விட்டன. நாம் முழுவதுமாக மன்னிக்கப்பட்டோம். நீங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக, பாரம்பரியத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் கழுவப்பட்டவர்களாகக் கடந்து போங்கள். பழையவைகளெல்லாம் ஒழிந்துபோயின, எல்லா பழைய தர்க்கங்களும் ஒழிந்துபோயின எல்லா பாப்டிஸ்டுகளும், மெத்தோடிஸ்டுகளும், பிரஸ்பிடேரியனரும் ஒரே இரத்தத்தினால் கழுவப்பட்டு சகோதரர்களாகிறோம். பாரம்பரிய தர்க்கங்களும் கடந்து போய் நாம் எல்லோரும் இங்கு ஐக்கியங்கொள்ள முடியும். அங்கு மாத்திரமே எல்லோரும் ஐக்கியங்கொள்ளமுடியும். நான் இந்த முழு சுவிசேஷ வியாபாரிகள் கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய தேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சில பிரஸ்பிடேரியர்கள் நின்று அவர்களால் முடிந்தவரை பலமாகச் சத்தமிடுகிறதையும் அன்னியபாஷையில் பேசுகிறதையும் கேட்டிருக்கிறேன். ஜிம் பிரவுன் - எத்தனை பேர் அவரை சந்தித்திருக்கிறீர்கள்? அவர் பிரஸ்பிடேரியர்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவர் அமெரிக்க ஐக்கியதேசத்திலே மிகவும் பிரசித்திபெற்ற பிரஸ்பிடேரியன் சபைக்குப் போதகராக இருக்கிறார். அவர் இங்கே வந்து ஆவியினால் நடனமாடி, அன்னியபாஷையில் பேசினார். லூத்தர்கள், மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியர்கள் மற்றும் எல்லோரும் இணைந்தவர்களாய், இது எதைக் காட்டுகிறது என்று பாருங்கள்? அவர்கள் எல்லோரும் இரத்தத்தின் கீழாக வந்திருக்கிறார்கள். எந்தவித ஸ்தாபனப் பெயர்களும் அவர்களுக்கு இல்லை. எந்த ஸ்தாபனத் தடைகளும் இல்லை. நாம் எல்லோரும் ஒருவராய் இருக்கிறோம்‚ நாம் எல்லோரும் கிறிஸ்தவர்கள். நம்மெல்லோருக்கும் பொதுவான காரியம் ஒன்று உண்டு. அது உண்மை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக... 73இப்பொழுது முடிக்கும் வேளையில், சில நாட்களுக்கு முன்பாக ஒரு புருஷனும் ஸ்திரீயும் பிரிந்து வாழும் படி எத்தனித்தார்கள். அவர்களால் முடிந்த வரை ஒன்றாய் இருக்க முயற்சித்தார்கள். ஒரு மனோதத்துவரிடம் சென்று அவர்களுடைய இரு மனதையும் ஒன்றாக இணைக்கமுடியுமா என்று பார்த்தார்கள். ஆனால் அவரால் முடியவில்லை. அவர்களால் முடிந்த வரை எல்லா இடத்திற்கும் சென்று முடிந்த வரை ஒன்றாய் இருக்கும் படிமுயற்சித்தார்கள். அப்படி இருந்தும் சண்டை போட்டுக்கொண்டு ஒன்று சேர முடியாமல் இருந்தார்கள். அவர்களால் ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் சண்டைபோட்டுக் கொண்டிருப்பார்கள். ஆகையால் விவாகரத்து பண்ணலாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆகவே விவாகரத்து பெறும்படி ஒரு வக்கீலை ஏற்பாடு செய்தார்கள். அதற்கு அவர், “சரி, நீங்கள் விவாகரத்து எடுக்கிறதற்கு முன்பாக உங்களுடைய இடத்தை விற்று இருக்கிற எல்லா பொருட்களையும் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். 74ஆகவே புருஷனும் மனைவியுமாய் ஒன்றாக வீட்டிற்குக் கடந்து போனார்கள். அவர்களுடைய படுக்கையறைக்குச் சென்று, “நான் இதை எடுத்துக் கொள்ளப்போகிறேன்” என்று அவள் சொன்னாள். அதற்கு அவன், “நான் இதை எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றான். அவர்கள் மறுபடியுமாய் சண்டைபோட்டுக் கொண்டு ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள், “சரி, நீ அதை கொடுப்பாய் என்றால், நான் உனக்கு இதைக் கொடுக்கிறேன்” என்று சொன்னார்கள். அப்படியாய் தொடர்ந்துசெய்து கொண்டிருந்தார்கள். அதன் பிறகு வீட்டின் வரவேற்பறைக்கும், சமையல் அறைக்கும், படுக்கையறைக்கும் எல்லா அறைக்கும் சென்று எல்லா பொருட்களையும் பிரித்துக் கொண்டார்கள். 75கடைசியாக உப்பரிகையில் ஏதோ ஒரு பொருள் இருப்பதாக அவர்களுடைய நினைவுக்குள் வந்தது. ஆகவே உப்பரிகையின் மேலாக ஏறி அந்தப் பழைய பெட்டியை இழுத்தார்கள். அதிலிருந்து வெவ்வேறு பொருட்களை எடுத்து, “இதை நீ வைத்துக் கொள், நீ இதை வைத்துக்கொள்” என்று சொல்லிக் கொண்டார்கள். கடைசியாக இருவருடைய கண்களும் ஒரு குறிப்பிட்ட பொருளின் மேலாகப்பட்டது. அதை இருவருமே எடுத்தார்கள். பிறகு இருவருமே ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். அது என்னது தெரியுமா? அவர்களுடைய மரித்துப் போன குழந்தையின் ஒரு ஜதை வெள்ளைக் காலணிகள். அது அவர்கள் இருவருக்குமே பொதுவானது. அவர்கள் இருவரும் அவர்களுடைய கையை அந்த காலணி மேல் வைத்தார்கள். உண்மையிலேயே அது யாருக்குச் சொந்தமானது?யாருக்குச் சொந்தம்? அது அவர்கள் இருவருக்குமே சொந்தமானது. அது அவர்கள் இருவருக்குமே பொதுவான காரியம். சில நிமிடத்திற்குள்ளாக ஒருவர் இன்னொருவரைப் பார்த்து அவர்களுடைய கன்னத்தில் கண்ணீர் வடிந்தோடினது. அது என்ன? அவர்களால் தங்கள் இருவருக்கும் இடையே பொதுவான ஒருவருடைய காரியம் வரும் வரை எல்லாவற்றையும் பங்கிட முடிந்தது. ஆனால் பரலோகத்தில் இருக்கிற தங்கள் குழந்தையின் காரியம் வந்தபோது எல்லாக் குழப்பங்களும் முடிவடைந்தன. ஒரு சில நிமிடத்திலே ஒருவர் இன்னொருவர் கரத்திற்குள்ளாக இருந்தார்கள். விவாகரத்திற்கான கேள்வி அங்கே இல்லாமல் போனது. சமாதானம் ஆளுகை செய்தது. 76சகோதரனே, இன்றிரவு நான் இதை உங்களுக்குச் சொல்லட்டும். நீங்கள் வெறும் ஒரு சபையிலே சேர்ந்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இதைத் தான் கேட்கிறேன். நமக்கு ஒரு பொதுவான காரியம் உண்டு. அது இயேசு கிறிஸ்துவே அல்லாமல் வேறொன்றும் இல்லை. நம் எல்லோருக்கும் அவரே பொதுவானவர். நாம் எல்லோருமே பாப்டிஸ்டாகவோ, எல்லோருமே மெதோடிஸ்டாகவோ, ஒருத்துவக்காரராகவோ, அல்லது திரித்துவக் காரராகவோ, யாராக இருந்தாலும் சரி நம் எல்லோருக்கும் ஒரு பொதுவான காரியம் உண்டு. அது கிறிஸ்து இயேசுவின் மூலமாய் தேவனால் கொடுக்கப்பட்ட மன்னிப்பாய் இருக்கிறது. அவருக்குள்ளாக சகல காரியமும் உண்டு. ஆனால் நாம் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் தேவன் கொடுத்த அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு பிறகு மற்ற காரியங்களை நாம் பெற்றுக் கொள்ளமுடியும். அது நம்முடைய கல்வித் திட்டத்தினாலோ அல்லது ஸ்தாபன அமைப்பினாலோ பெற்றுக்கொள்ள முடியாது. எப்பொழுதுமே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மாத்திரமே பெற்றுக் கொள்ளமுடியும். நாம் எல்லோரும் சிலுவையண்டையில் சந்தித்து ஒன்றாய் இருந்து பொதுவாய் காரியத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ஆமென் என்கின்றனர்). இப்பொழுது ஜெபத்திற்காக இந்த நேரத்தில் நம்முடைய தலையை தாழ்த்துவோம். (கூட்டத்தார் மத்தியில் இருந்து ஒரு சகோதரி உரத்தசத்தமாய்ப் பேசத் தொடங்கினார்கள்) ஆமென். 77நிச்சயமாகவே நம்முடைய தலையும், இருதயமும் தாழ்த்தியிருக்கும் நேரத்தில் நம்முடைய இருதயத்தைத் தாழ்த்தி, “ஆண்டவரே, என்னுடைய எல்லாப் பாரம்பரிய காரியங்களினாலும் நான் சரியாக இருக்கிறேனா என்று சொல்லும்” என்று சொல்லுங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்பாராக. இந்த முடிவான ஜெபத்தில் நீங்கள் இருக்கவேண்டிய நிலையில் இல்லாத பட்சத்தில் உங்களை ஜெபத்தில் நினைவு கூற விரும்புகிறீர்களா? நம்முடைய பாவ நிவர்த்திக்காக நாம் எல்லோருமாக அவருடைய இரத்தத்தின் கீழ் சந்திக்க முடியும் என்று அறிந்திருக்கிறோம். அந்த இரத்தமே நம்முடைய பரிகாரமாக இருக்கிறது. அப்படிச் செய்யும் போது நாம் முழுவதுமாக உலகக் காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவோம். இந்த ஜெபத்தில் நினைவு கூற விரும்புகிறவர்கள் உங்களுடைய கரங்களை தேவனுக்கு நேராய் உயர்த்தி அவருக்குச் தெரியப்படுத்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ‚ எத்தனை கரங்கள். “என்னை நினைவு கூரும் ஆண்டவரே” 78இந்த உலகத்தில் உலாவுவதற்கு இன்னும் அதிக நாட்கள் நமக்கு இல்லை என்று உணருகிறீர்களா? நீங்கள் சொல்லலாம். “நான் ஒரு இளைஞன்” என்று. சகோதரனே, சகோதரியே, இன்றிரவு உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் மரிக்க நேரிடும். நான் அறியேன். நீங்கள் கொண்டிருக்கிற ஒரே ஒரு காரியம் என்னவென்றால், உங்களுடைய மூச்சு மட்டும் தான். “தேவனாகிய கர்த்தாவே, இதோ என்னுடைய கரங்களை உயர்த்தி, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று சொல்லுவீர்களா? “நீர் கொடுத்த இந்த இரத்தத்தின் அடையாளமாகிய பரிசுத்த ஆவியானவர் என் மேல் வரட்டும். இதுவரை நான் பரிசுத்த ஆவியைப் பெற்றதேயில்லை. ஆனால் அது உண்டென்று அறிந்திருக்கிறேன். நீர் பேசுகிற வண்ணமாய், என்னுடைய எல்லா பாவமும் கடந்து போனது; மற்றும் இந்த உலகத்தின் ஆசையெல்லாம் என்னைவிட்டுப் போனது. நான் புது சிருஷ்டியானேன் என்ற நல் உணர்வை ஏற்படுத்துகிற இந்தக் காரியத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதை என்னுடைய இருதயத்திலே அறிந்து கொள்ள விரும்புகிறேன். தேவனே, நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர், நான் என் கரங்களை சகோதரன் பிரான்ஹாமுக்கு முன்பாக உயர்த்தவில்லை, ஆனால் உமக்கு நேராய் தூக்கியிருக்கிறேன். (யாரும் கண்களை திறந்து பார்க்கவேண்டாம். தேவன் ஒருவர் மாத்திரமே இதைப் பார்க்கட்டும்) தொடர்ந்து தேவரீர், என் மேலாகப் பூசப்பட்ட இரத்தத்தின் அடையாளம் எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும் ஆண்டவரே” என்று சொல்லுங்கள். “எனக்காக ஜெபியுங்கள் சகோதரன் பிரான்ஹாம்” என்று சொல்லுகிறவர்கள் உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. 79நீங்கள் ஒருவேளை மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், அல்லது யாராக இருந்தாலும் பரவாயில்லை. இது விரும்புகிற யாவருக்கும் உண்டு. இப்பொழுது... இங்கிருக்கின்ற சபைகளைக் குறித்து விரோதமாய்ப் பேசவில்லை. அவர்களெல்லாம் சரிதான். ஆனால் நான் சொல்ல முயற்சிக்கிறது என்னவென்றால், அவைகளெல்லாம் உங்களை இரட்சிக்காது. பாருங்கள். அது கர்த்தருடைய மன்னிப்பின் கிருபையின் மூலமாக கிடைக்கிறது. அது தேவனுடைய மன்னிப்பு. இது இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே பிரதிநிதித்துவபடுத்தபடுத்துகிறது. சபையினால் அல்ல. அதுவே உங்களுடைய பதிலியாகக் கொடுக்கப்பட்டது. நீங்கள் அதின் மேலாக உங்களுடைய கையை வைத்து, 'இந்த பதிலியை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் மேல் இரக்கமாயிரும் தேவனே“ என்று சொல்லுங்கள். ஒருவேளை இங்கு சிலர் முழு உத்தமத்தோடு சபையிலே அங்கத்தினர்களாகச் சேர்ந்திருக்கலாம். நிச்சயமாகவே நீங்கள் உங்கள் முழு உத்தமத்தோடு சேர்ந்திருக்கிறீர்கள் என்று நான் முழு மனதோடு நம்புகிறேன். ஆகவே “சகோதரன் பிரான்ஹாம், உண்மையாகவே என்னுடைய இருதயம் பாரம்பரிய காரியங்களிலிருந்து இன்னும் சுத்திகரிக்கப்படவில்லை. யாராவது இந்த சபையைக் குறித்துத் தவறாகப் பேசுவார் என்றால்; இன்னும் வேதமும் என்னுடைய சபை தவறு என்று நிருபித்தாலும்; என்னால் அதை என்னுடைய இருதயத்திலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை; என்னால் முடியவில்லை, ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனக்காக ஜெபியுங்கள்” என்று சொல்லுகிறவர்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, 'எனக்காக ஜெபியுங்கள்“, என்று சொல்லுவீர்களா? நல்லது, நிச்சயமாக நான் உங்களுக்காகச் செய்வேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. அது நல்லது. 'வேதத்தில் தேவன் எந்தவிதமாகக் குறிப்பிட்டிருக்கிறாரோ, சரியாக அதே விதமாக ஏற்றுக்கொள்ளவிரும்புகிறேன். மற்றும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் மேலாக வரட்டும்”. 80இரத்தமானது பூசப்படும்போது, இரத்தம் பூசப்பட்டதற்கான அடையாளமாக பரிசுத்த ஆவியானது கொடுக்கப்படுகிறது. அன்று பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி வந்தபோது, மக்களுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இன்னும் எப்போதெல்லாம் மக்கள் மேல் வருகிறதோ, அதே காரியத்தைத்தான் செய்யும். பேதுரு சொன்னதைப் போன்று 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வர வழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது“ என்று சொன்ன அதே வாக்குத்தத்தம் நிறைவேறும். இப்பொழுது இங்கேயிருக்கிற பத்துப் பைசாவானது பத்துப்பைசாவாக இருக்குமானால் அது எந்த இடத்திலும் பத்துப் பைசாதான். எங்கேயிருந்தாலும் அது பத்து பைசா தான். இங்கு வைரக்கல் இருக்குமானால் அதுஎங்கும் வைரக்கல் தான். இங்கே அது வீடாய் இருக்கும் என்றால், எங்கேயும் அது வீடுதான். பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்திருப்பார் என்றால் இன்றும் அதேவிதமாகத் தான் பரிசுத்த ஆவியானவர் வருவார். நீங்கள் இன்னும் அந்தவிதமான அனுபவத்தைப் பெறவில்லை என்றால் நாம் ஜெபிக்கிறதான நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்படிச்செய்வீர்களா? 81எங்களுடைய பரலோகப் பிதாவே, சூரியனானது வேகமாய் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறதை அறியும்போது, இனி காலம் செல்லாது என்று அறிந்திருக்கிறோம். ஒரு நாளில் அந்த மகத்தான பிரதான தூதன் நித்தியத்திலிருந்து காலம் என்னும் காட்சிக்குள்ளாக அடி எடுத்து வைக்கப் போகிறார் என்பதை அறிகிறோம். மற்றும் தேவ எக்காளம் ஊதப்படும் போது, ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும் தாங்கள் அறிந்த தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தின் படியாகபதில் அளிக்க வேண்டியதாய் இருக்கிறது. இன்னும் நாங்கள் நியாயந்தீர்க்கும்படி நீர் ஏதாவது ஒரு தரத்தை இந்த பூமியில் வைத்திருக்கிறீர். எங்களுடைய ஸ்தாபனத்தின் தரத்தை எடுப்போம் என்றால் எவ்வளவாயினும் அவற்றைத் தவற விடுவோம். மற்றும் எந்த ஸ்தாபனம் சரி என்று எடுப்போம்? நிச்சயமாக ஆண்டவரே எது சரி என்று அறிவதிலே நாங்கள் முழுவதுமாய் குழப்பமடைந்தவர்களாய்; என்ன செய்வது, எதை நம்புவது என்று அறியாமல் தவிப்போம். ஆனால் நாங்கள் நம்பக் கூடிய ஒரு தரம் இருக்குமானால் அது உம்முடைய வார்த்தையே. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று உம்முடைய வார்த்தையானது கூறுகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவனால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது. அவன் அதை விசுவாசத்தினாலே ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறந்தால் மாத்திரமே அதைப் புரிந்து கொள்ள முடியும். “காணமாட்டான்” என்றால் புரிந்து கொள்ள மாட்டான் என்று பொருள்படுகிறது. 82ஆண்டவரே, இன்றிரவு இந்தக் கட்டிடம் முழுவதுமாக பட்டிணத்திலுள்ள வியாபாரிகள், ஸ்திரீகள், வாலிபப் பையன்கள், வாலிபப் பெண்கள் முழு உத்தமத்தோடு தங்கள் கைகளை உயர உயர்த்தியிருக்கிறார்கள் என விசுவாசிக்கிறேன். இப்பொழுது அவர்கள் தாங்கள் ஒரு குற்றவாளி என்ற உணர்வு இல்லாமல் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்க முடியாது. இன்னும் பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள் தவறாய் இருக்கிறார்கள் என்று நிரூபித்து தாங்கள் சரியாய் இருக்கவேண்டும் என்ற உணர்வை கொடுத்திருக்கிறார். மகத்தான சிருஷ்டிகரே, உம்மை ஒரு நாளில் சந்திப்பார்கள் என்று அறிந்து தங்களுடைய கரங்களை உமக்கு நேராய் உயர்த்தி இருக்கிறார்கள். ஆண்டவரே அவர்கள் உத்தமமாய் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இதோ நான் அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறேன். ஆண்டவரே, இந்த இரவின் பொழுது நான் ஜெபிக்கிறதான நேரத்தில், இங்கேகரங்களை உயர்த்தின ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் அவர்களுடைய ஜீவியம் முழுவதும் நிரப்பப்படும் மட்டும் ஓயாமல் உம்மைப் பற்றிகொண்டவர்களாய் இருப்பார்களாக. இதை அருளும் ஆண்டவரே. இவர்களை நான் இயேசுகிறிஸ்துவின் வெற்றிச் சின்னமாக உரிமை கோருகிறேன். இதைச் செய்யும்படி ஜெபிக்கிறேன். ஆண்டவரே, இழந்து போனவர்களை இரட்சியும். 83பிதாவே, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பும். அவர்களுடைய ஆத்துமாக்களுக்குள்ளாக ஊற்றும். நீரே மகிமையை எடுத்துக்கொள்வீராக. இயேசுவே “பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்றீர். அதுமட்டுமல்ல 'விசுவாசம் கேள்வியினாலே வரும்,கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்கிறதினால் வரும்“ என்று சொன்னீர். 'விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று சொன்ன படியாக தேவனுடைய வார்த்தையானது இங்கு பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது.“எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை முன் குறித்திருக்கிறார், எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துமிருக்கிறார்” என்ற வேத வசனத்தின் படியாக இழுக்கப்பட்டிருக்கிறார்கள். உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே நீர் அவர்களுடைய பெயர்களை ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதிவிட்டீர். மற்றும் இன்றிரவு பரிசுத்தஆவியானவர் அவர்களை அழைத்திருக்கிறார். அவர்களும் தங்களுடைய கரங்களை அவருக்கு உயர்த்தியிருக்கிறார்கள். இப்பொழுதும் ஆண்டவரே, இவர்களுக்கு நித்திய ஜீவனைத் தாரும். பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக வந்து செத்த கிரியைகளிலிருந்தும் எல்லா பாரம்பரியத்திலிருந்தும் அவர்களை விருத்தசேதனம் செய்து முற்றிலுமான மன்னிப்பைக் கொடுக்கும்படியாக இவர்களை உம்முடைய மகிமைக்கென்று கேட்கிறேன். சோதோம் நாட்களில் இருக்கிறதைப் போன்று, பெண்கள் தங்கள் முகத்தில் சாயம் பூசி ஒழுக்கக் கேடாய் ஜீவித்து நாட்டை உலுக்குகிற இந்த இருண்ட நேரத்தில், இவர்களை உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பி அனுப்புவீராக. ஓ தேவனாகிய கர்த்தாவே, ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும் எரிகிற அக்கினி ஜீவாலைகளாக இங்கிருந்து கடந்து செல்வார்களாக. அவர்கள் தேவனுடைய நன்மையினால் நிரப்பப்படும் மட்டுமாக பரிசுத்த ஆவியானவர் தாமே அக்கினியை அவர்கள் மேல் தத்ரூபமாக அனுப்புவாராக. அவர்கள் தாமே சந்திக்கிற ஒவ்வொரு பாவியையும் சிலுவையண்டையில் வழிநடத்திக்கொண்டு வருவார்களாக. அவர்களும் இந்த மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள உதவி செய்வீராக. மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே மற்றும் யாரனாலும் இதிலே வந்து விழட்டும். இதை அருளும் ஆண்டவரே. இவர்களெல்லாரும் உம்முடையவர்கள். உம்முடைய திருக்கரத்திலே இவர்களை ஒப்புக் கொடுக்கிறேன், நீர் தாமே இதை இவர்களுக்கு அருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆமென். 84நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையோர் ஆமென் என்கின்றனர்). நாம் இந்தப் பழைய அருமையான பாடலைப் பாடலாமா? இது ஒருவேளை உங்களுடைய முறைமைக்கு மாறாய் இருக்கலாம்‚ ஒரு சில நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். பாடல் பாடுகிறதை நான் விரும்புகிறேன். உங்களுக்கு அது தெரியுமா... சில சமயங்களில் பிரசங்கிக்கும்போது வெட்டும்படியாக சில காரியங்களைக் கூற வேண்டியிருக்கும், ஆனால் கீலேயாத்திலே தைலம் இருக்கிறது. அது ஆத்தமாவை சுகப்படுத்தும். (ஆமென்) நாம் இந்த பழைய அருமையான பாடலைப் பாடலாம். முடிந்தால் என்னோடு பாடுங்கள். 'அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் என்னை முதலில் நேசித்ததினால்“ என்ற பாடல் உங்களுக்கு தெரியுமா? (ஆமென்) யாராவது இதை எனக்காக வழி நடத்துவீர்களா. அவரை நேசிக்கிறேன், நான்அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் என்னை முதலில் நேசித்து அந்த கல்வாரி மரத்திலே என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார். 85அதினுடைய ராகத்தை இசைக்கலாம். இப்பொழுது “அவரை நேசிக்கிறேன்” என்ற ராகத்தை போடுகிறதான நேரத்தில்... எத்தனை பாப்டிஸ்டுகள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்திக் காட்டுங்கள். பிரஸ்பிடேரியர்கள்? லூத்தர்கள்? நசரீன்கள்? பரிசுத்த யாத்திரீகர்கள்? பெந்தெகொஸ்தேயினர்கள்? ஓ என்னது‚ இவ்வளவு பேர்களா. எல்லோருமாக... இப்பொழுது நாம் சிலுவையின் கீழாக இந்த கிருபையின் மன்னிப்பின் கீழாக வந்தபோது என்ன செய்தோம்? நாம் எல்லோரும் மன்னிக்கப்பட்டவர்களானோம், சபையின் மூலமாக அல்ல கல்வாரியின் மூலமாகவே மன்னிக்கப்பட்டோம். இந்தப் பாடலை மறுபடியும் பாடும்போது, மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தேயினரிடத்திலே உங்களுடைய கரங்களை குலுக்குங்கள். அவரை நேசிக்கிறேன், நான்அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் என்னை முதலில் நேசித்து அந்த கல்வாரி மரத்திலே என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார். இப்பொழுது, ஒருவரோடொருவர் கேட்கும்படி பாடலாம். நீங்கள் அவரை நேசிப்பீர்கள் என்றால் உங்கள் தலையைத் தாழ்த்தி இரு கரத்தையும் தேவனுக்கு நேராக உயர்த்தி 'உம்மை நேசிக்கிறேன்“ என்று முழு இருதயத்தோடும் சொல்லுங்கள். அவரை நேசிக்கிறேன், நான்அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் என்னை முதலில் நேசித்து அந்த கல்வாரி மரத்திலே என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார்.